வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலை மீண்டும் உயருகிறது.. விவசாயிகள் மகிழ்ச்சி
சென்னை: சின்ன வெங்காயம் முதலில் விலை உயர்ந்த நிலையில், அடுத்தாக தற்போது பெரிய வெங்காயம் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. புதிய திருப்பமாக தக்காளியும் விலை உயரத் தொடங்கி உள்ளது. இதனால் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளும், தக்காளி பயிரிட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதுமே வெங்காய விலை அதிடியாக உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் வெங்காயத் தேவையை மகாராஷ்டிர மாநிலம் தான் அதிக அளவு பூா்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் உற்பத்தி குறைந்ததால், அங்குள்ள முக்கிய வெங்காய சந்தையான நாசிக்கில் இருந்து தமிழகத்துக்கு வரும் வெங்காயத்தின் அளவு கடந்த ஒரு மாதமாக கணிசமாக குறைந்துள்ளது. இது மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வெங்காய வரத்து அதிரடியாக குறைந்தது.

இதனால், கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயா்ந்தது. நேற்றைய நிலவரப்படி, நாசிக்கிலிருந்து வரும் முதல் தரத்திலான ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.70-க்கும், பெங்களூரூவிலிருந்து வரும் இரண்டாம் தர பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.60-க்கும், ஆந்திரத்தில் இருந்து வரும் மூன்றாம் தர பெரியவெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையாகியது. அக்டோபா் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒருகிலோ பெரிய வெங்காயம் அக்டோபா் கடைசி வாரத்தில் ரூ.70-ஐ எட்டியுள்ளது.
சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே அக்டோபா் முதல் வாரத்தில் ரூ.70-க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், தற்போது கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையாகி வருகிறது . சில்லறை விற்பனையில் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டுகிறது.
இதனிடையே வெங்காயத்தின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் அதன் மீது குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக (எம்இபி) டன் ஒன்றுக்கு ரூ. 66,700-ஆக (800 டாலா்) மத்திய அரசு நிா்ணயம் செய்திருக்கிறது. இந்த விலை நிா்ணயம் அக்டோபா் 29-இல் தொடங்கி வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் எனில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் கணிசமாக இறக்குமதி செய்யப்படுகிறது. வாகா எல்லை வழியாக தினமும் ஏராளமான வெங்காய லாரிகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த வெங்காயம் தான் டெல்லி,பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், தக்காளி விலையும் தமிழ்நாட்டில் கணிசமாக உயரத்தொடங்கி உள்ளது. தாக்காளி விலை ஒரு பெட்டி 100 ரூபாய் ஆக இருந்த நிலையில் இப்போது 500 ரூபாய் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம், கடத்தூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவு தக்காளியை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த, 10 நாட்களுக்கு முன்பு , ஒரு பெட்டி, தக்காளி விலை ரூ. 100 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காமல் விரக்தியில் இருந்த விவசாயிகள், கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் வரை 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 200 ரூபாய் என்ற வகையில் விற்பனையானது. இந்நிலையில் தக்காளி வரத்து நேற்று குறைந்து போனாதால் திடீரென விலை உயர்ந்து, 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி, ரூ 500க்கு விற்பனையானது. இதனால் தக்காளி பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக தக்காளி விலை மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications