Tomato price: சற்றும் கீழே இறங்காத தக்காளி விலை.. சில்லறை விற்பனையில் ரூ.80 வரை எகிறியது!
சென்னை: தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையாவதால், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கு இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த மாதம் வரை தக்காளியின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் விலை சரிந்து ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் வரை தக்காளி ஒரு கிலோ ரூ.20 என்ற அளவில் விற்பனை ஆனது.
சென்னையை பொறுத்தவரை, தினமும் 1,300 டன் தக்காளி தேவை உள்ளது. தற்போது பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து வருகிறது. தக்காளியின் வரத்து சரிந்து விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையாவதால், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் முதல் தர வெங்காயம் ஒரு கிலோ 24 ரூபாய்க்கும், இரண்டாம் தர வெங்காயம் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தவிர்த்து மற்ற காய்கறிகளின் விலையில் பெரிதாக மாற்றமில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications