தக்காளி + ரூ. 1000 உரிமைத் தொகை.. களமிறங்கிய ரேஷன் ஊழியர்கள்.. ரேஷன் கடைகளில் என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி விலை உயர்வை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை களைகட்டி உள்ளது. அதே சமயம் இன்னொரு பக்கம் ரூ. 1000 உரிமை தொகை முகாம்களும் ரேஷன் ஊழியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் 30 ரூபாய்க்கு கிலோ தக்காளி விற்றது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தாண்டி வடஇந்தியாவில் விற்பனை ஆகிறது.

Tomato sale + 1000 rs Scheme: How Tamil Nadu Ration shop workers are going through hectic work?

தமிழ்நாட்டில் தக்காளி விலை 150 ரூபாயை கடந்த மாதம் எட்டியது. தற்போது தமிழ்நாட்டில் தக்காளி விலை 180 ஐ தாண்டி விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அடிப்படை பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக கொள்முதல் விலையில் அமுதம் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தக்காளி விற்பனை 200 ரேஷன் கடைகளுக்கு உயர்த்தப்பட்டது. தற்போது தக்காளி விற்பனை இன்று முதல் 500 ரேஷன் கடைகளுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

Tomato sale + 1000 rs Scheme: How Tamil Nadu Ration shop workers are going through hectic work?

இந்த ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை கொள்முதல் விலையான 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 100 ரேஷன் கார்டுக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கார்டுக்கு தினமும் ஒரு கிலோ மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரேஷன் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஊழியர்கள் திணறல்: ரேஷன் கடைகளில் இதனால் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ரேஷன் கடைகளில் 100 மீட்டர் வரை பல இடங்களில் கூட்டம் இருந்தது. இதனால் ரேஷன் கடைகளில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் திணற தொடங்கி உள்ளனர். : தக்காளி விலை உயர்வை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை களைகட்டி உள்ளது. அதே சமயம் இன்னொரு பக்கம் ரூ. 1000 உரிமை தொகை முகாம்களும் ரேஷன் ஊழியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

Tomato sale + 1000 rs Scheme: How Tamil Nadu Ration shop workers are going through hectic work?

ஊழியர்கள் பலரும் 1000 ரூபாய் உரிமை தொகை முகாம்களில் பணியாற்றுகின்றனர். பாதி நேரம் ரேஷன் கடைகளிலும், பாதி நேரம் முகாம்களிலும் பணியாற்றுகின்றனர். அதனால் அவர்களால் பணிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகை ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது முகாம்களில் பெறப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பெரும்பாலும் ரேஷன் கடை ஊழியர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்தான் இரண்டு பணிகளையும் கவனிப்பதால் ரேஷன் ஊழியர்கள் திணற தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. வரும் வாரம் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முகாம் பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த வாரமும் விடுமுறை நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+