தக்காளி வாங்க ரேசன் கார்டு தேவையா? தமிழக அரசு சொல்வதென்ன? காய்கறிகள் விற்பனை எப்போது?
சென்னை: ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் தாக்காளிகளை வாங்குவதற்கு ரேசன் கார்டு கொண்டு வரத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் தாக்காளிகளை ஒருவருக்கு 1 கிலோ என வாங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி விலை கடந்த 15 நாட்களாக ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் மேலாக வெளி சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. இதனையடுத்து பசுமை பண்ணைக்கடைகளிலும் ரேசன் கடைகளிலும் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் முதற்கட்டமாக 82 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. நியாயவிலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. வட சென்னை 32, மத்திய சென்னை 25, தென்சென்னை 25 என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தக்காளி விற்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ரேசன்கடைகளுக்கும் 50 கிலோ தக்காளி மட்டுமே விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தக்காளியை போல அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலை கடந்த ஒருவாரமாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.260க்கும், பூண்டு ரூ.200க்கும், பீன்ஸ் ரூ.110 க்கும், பச்சைமிளகாய் ரூ.90க்கும், வண்ண குடமிளகாய் ரூ.220க்கும், பட்டாணி ரூ.180க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காயம் 20க்கும் சின்ன வெங்காயம் ரூ130க்கும் விற்பனையாகிறது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 ல் இருந்து ரூ.150க்கும் இஞ்சி ரூ.300க்கும், பீன்ஸ் ரூ.130க்கும் பட்டாணி ரூ.210 க்கும் பச்சை மிளகாய் ரூ.110 க்கும் வண்ண குட மிளகாய் ரூ.240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவால் அனைத்து காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பீன்ஸ் இஞ்சி, வண்ண குடமிளகாய், பட்டாணி விலை அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நேற்று காலை 450 வாகனங்களில் 5,000 டன் என்ற அளவில் குறைவான காய்கறிகள் வந்துள்ளன. காய்கறிகள் விலை உயர்வு இந்த மாதம் முழுவதும் நீடிக்கும். அடுத்த மாதம் காய்கறிகள் விலை படிப்படியாக குறையும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
காய்கறிகள் விலை அதிகரித்தால் ரேசன் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியிருந்தார். தற்போது ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வரிசையில் காத்திருந்து ஏராளமானோர் தக்காளி வாங்கிச் செல்கின்றனர். தக்காளி வாங்க வருபவர்கள் ரேசன் கார்டு கொண்டு வரத்தேவையில்லை என்றும் அருகில் உள்ள ரேசன் கடைகளில் யார் வேண்டுமானாலும் தக்காளி வாங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காய்கறிகள் விலையும் அதிகரித்து வருவதால் தக்காளியை போல காய்கறிகளையும் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் அரசு விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications