தக்காளி விலை உயர்வு.. அமைச்சர் சொன்ன ஷாக்கிங் செய்தி.. ரொம்ப கவனமாக இருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க தக்காளி விலை மோசமாக உயர்ந்து வரும் நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வாரமாக இந்தியா முழுக்க அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக வெங்காயம், தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

Tomatoes prices may remain same for 10 more days says Tamil Nadu Minister

தக்காளி விலை உயர்விற்கு நிறைய காரணங்கள் உள்ளன. போதுமான உற்பத்தி இல்லை, மழை காரணமாக தக்காளிகள் அழுகியது, மழையால் போக்குவரத்து தடை பட்டு தக்காளி விலை உயர்ந்தது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுவாக உயரும் பணவீக்கம், மக்கள் அச்சம் காரணமாக அதிக அளவு தக்காளிகளை வாங்கியது ஆகியவை தக்காளி விலை உயர்விற்கு காரணமாக அமைந்தது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.

ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோ ₹150 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. நேற்று 20 ரூபாய் குறைந்து 130 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று 120 - 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அடிப்படை பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக கொள்முதல் விலையில் அமுதம் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

10 நாட்கள்: இந்த நிலையில் நாடு முழுக்க தக்காளி விலை மோசமாக உயர்ந்து வரும் நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தக்காளி வரத்து இன்னும் அதிகரிக்கவில்லை. இதை இறக்குமதி செய்வது தொடர்பாக மத்திய அரசு யோசிக்க வேண்டும். அதற்கான கொள்கைகளை மத்திய அரசே வகுக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேரடியாக விற்பனை: தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. உள்ளது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இன்னொரு பக்கம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது. இதையடுத்து அமுதம் அங்காடிகளில் இன்று முதல் மலிவு விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கடந்த வாரம் முதல் கொள்முதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள், ரேஷன் கடைகளில் கடந்த வாரம் முதல் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு மக்களிடம் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

தக்காளி ஒரு கிலோ 60க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் துவரம் பருப்பு அரை கிலோ 75க்கு விற்பனை செய்யப்படும். உளுத்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

விலை குறைவு: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் மார்க்கெட்டில் தக்காளி வாங்குவது குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் தக்காளி தேக்கம் ஏற்பட்டது. தக்காளிக்கான தேவை மார்க்கெட்டில் குறைந்த நிலையில் தானாக ஒரே நாளில் அதிரடியாக தக்காளி விலை குறைந்தது.

அதன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் நேற்று தக்காளி கிலோவுக்கு ரூ.20குறைந்தது. தக்காளி கிலோ ரூபாய் 120 மற்றும் 130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பல்பொருள் அங்காடிகளில் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுவதால் மற்ற பொருட்களின் விலையும் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+