சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடசென்னைக்கு கபிலன் பிஸ்தாவா இருக்கலாம்... ஆனா பாண்டின்னா "ரங்கா"தான்.. அவ்வளவு பெரிய ஆட்டக்காரரு!

Google Oneindia Tamil News

சென்னை: புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி அப்பகுதி முழுவதும் பேனர்கள் தெறிக்கவிடுகின்றன. சார்பட்டா பரம்பரை கபிலன் கெட்டப்பில் ரங்கசாமிக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி நாளை புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் தற்போது என் ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

தற்போது பாஜக கூட்டணியுடன் ஆட்சியை பிடித்துள்ளார். இந்த தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளில் என் ஆர் காங்கிரஸும் 6 தொகுதிகளில் பாஜகவும் வென்றது.

 கருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி கருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி

பெரும்பான்மை

பெரும்பான்மை

இதையடுத்து 16 சீட்கள் இருந்தால் பெரும்பான்மை என்பதால் என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் அமர்ந்துள்ளது. இவர் சைக்கிளில் பயணித்த முதல்வர் என்றும் சொல்லப்படுகிறது. அது போல் எளிமையாக இருப்பார் என்பதால் இவரை மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த நிலையில் நாளை அவரது பிறந்தநாளையொட்டி புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கபிலன்

கபிலன்

அதில் இவரை சார்பட்டா பரம்பரை கபிலனை போன்று சித்தரித்துள்ளார். அதில் பாக்ஸிங் உடையில் ரங்கசாமியின் படம் இடம்பெற்றுள்ளது. அது போல் காமராஜரை ரங்கன் வாத்தியார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். காமராஜரிடம் கற்று கொண்டு அவரை போன்று ஆட்சி நடத்துகிறார் ரங்கசாமி என இவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது போல் புதுவையில் வலிமை பிறந்த நாளில் வணங்குகிறோம் என தெரிவித்துள்ளார்கள்.

புகைப்படம்

புகைப்படம்

அது போல் இவரை கல்வித் தந்தையே என்று அழைத்தும் பேனர்களை வெளியிட்டுள்ளார்கள் இவரது ஆதரவாளர்கள். காமராஜருடன் ரங்கசாமி உணவு அருந்துவது போன்ற புகைப்படத்துடன் புதுவையின் காமராஜரே என ரங்கசாமியை அழைத்துள்ளார்கள்.

வழிக்காட்டியே

வழிக்காட்டியே

புதுவையின் குலதெய்வமே, வழிக்காட்டியே, நம்பிக்கையே, மக்கள் முதல்வரே, ஆன்மீக செம்மலே, வெற்றி முகமே. தாய் உள்ளமே என அடைமொழிகளால் குறிப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அவர் யமஹா பைக்கை கம்பீரமாக ஓட்டி வருவது குறித்தும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அது போல் அரசு கார் இருந்தாலும் பல சமயங்களில் அவர் இரு சக்கர வாகனத்தையே பயன்படுத்துவார் என குறிப்பிட்டுள்ளார்கள்.

English summary
Different types of banners are installed in Pondicherry ahead of CM Rangasamy's Birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X