நாளை நடக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவு எடுக்க போகிறாரா முதல்வர் ஸ்டாலின்? ஒரே பரபர
சென்னை: தமிழக சட்டசபையில், துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், துறை ரீதியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நாளை மாலை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. புதிதாக துவங்கப்பட உள்ள தொழில் திட்டங்கள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து நாளைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஏராளமான புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவையில், துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தற்போது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இதில் ஒவ்வொரு நாளும், அந்தந்த துறை ரீதியாக முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகி வருகின்றன.. அத்துடன், உறுப்பினர்களின் கேள்விக்கும் பதில்கள் தரப்பட்டு வருகின்றன..
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை அதாவது ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. மேலும் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்கள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்தும், ஆலோசனை நடைபெறலாம் என்றும், சில துறைகள் சார்ந்த கொள்கை முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதில், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.. எனவே, நாளை நடக்க போகும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளுநருக்கு எதிரான சுப்ரீம் கோர்ட் தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. இதனால், நாளை நடக்க போகும் அமைச்சரவை கூட்டம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications