தோற்றாலும் கெத்த விடலையே! அதிமுகவில் டாப் 10 வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள்! கட்சி வாரியாக லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாதக வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கிய டாப் 10 வேட்பாளர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக தலைமையில் இந்தியா கூட்டணி, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக, தேமுதிக இணைந்து ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress dmk aiadmk

இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி தொடக்கம் முதலே முன்னிலை வகித்தது. பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிட்ட தருமபுரி, அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டும் திமுக, பாஜக, அதிமுக வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர்.

இறுதியில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. 22 தொகுதிகளில் திமுகவும், புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. அதேபோல, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முழுமையாக வென்றது.

சில தொகுதிகளை தவிர பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வென்றது. தோல்வி அடைந்தாலும், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சில இடங்களில் ஓரளவுக்கு நன்றாக பெர்ஃபார்ம் செய்திருந்தனர். கட்சி வாரியாக டாப் 10 வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

அதிமுகவின் 33 வேட்பாளர்களில் டாப்பர்ஸ்:

1. கள்ளக்குறிச்சி - குமரகுரு - 5, 07,805 வாக்குகள்

2. சேலம் - விக்னேஷ் - 4,95,728 வாக்குகள்

3. நாமக்கல் - தமிழ்மணி - 4,32,924 வாக்குகள்

4. விழுப்புரம் - பாக்யராஜ் - 4,06,330 வாக்குகள்

5. சிதம்பரம் - சந்திரஹாசன் - 4,01,530 வாக்குகள்

6. கரூர் - தங்கவேல் - 3,68,090 வாக்குகள்

7.காஞ்சிபுரம் - ராஜசேகர் - 3,64,571 வாக்குகள்

8. திருப்பூர் - அருணாசலம் - 3,46,811 வாக்குகள்

9. திருவண்ணாமலை - கலியபெருமாள் - 3,13,448 வாக்குகள்

10. ஈரோடு - ஆற்றல் அசோக் குமார் - 2,93,629 வாக்குகள்

திமுக வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்றவர்கள்:

1. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு - 7,58,611 வாக்குகள்

2. பெரம்பலூர் - அருண் நேரு - 6,03,209 வாக்குகள்

3. காஞ்சிபுரம் - ஜி. செல்வம் - 5,86,044 வாக்குகள்

4. தேனி - தங்க தமிழ்ச்செல்வன் - 5,71,493 வாக்குகள்

5. வேலூர் - கதிர் ஆனந்த் - 5,68,692 வாக்குகள்

6. கோவை- கணபதி ப. ராஜ்குமார் - 5,68,200 வாக்குகள்

7. சேலம் - டி.எம் செல்வகணபதி - 5,66,085 வாக்குகள்

8. அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் - 5,63,216 வாக்குகள்

9. ஈரோடு- பிரகாஷ் - 5,62,339 வாக்குகள்

10. கள்ளக்குறிச்சி - மலையரசன் - 5,61,589 வாக்குகள்

பாஜக வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்றவர்கள்:

1. கோவை - அண்ணாமலை - 4,50,132 வாக்குகள்

2. கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன் - 3,66,141 வாக்குகள்

3. வேலுார் - ஏ.சி.சண்முகம் - 3,52,990 வாக்குகள்

4. நெல்லை - நயினார் நாகேந்திரன் - 3,36,676 வாக்குகள்

5. புதுச்சேரி - நமச்சிவாயம் - 2,89,489 வாக்குகள்

6. தென்சென்னை - தமிழிசை சௌந்தரராஜன் - 2,89,019 வாக்குகள்

7. நீலகிரி - எல். முருகன் - 2,32,627 வாக்குகள்

8. பொள்ளாச்சி - வசந்தராஜன் - 2,23,354 வாக்குகள்

9. திருவள்ளூர் - பாலகணபதி - 2,24,801 வாக்குகள்

10. மதுரை- ராம. சீனிவாசன் - 2,20,786 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி சார்பில் அதிக வாக்குகளை பெற்றவர்கள்:

1. சிவகங்கை - எழிலரசி - 1,63,412 வாக்குகள்

2. ஸ்ரீபெரும்புதுார் - ரவிச்சந்திரன் - 1,40,201 வாக்குகள்

3. தென்காசி - இசை மதிவாணன் - 1,30,335 வாக்குகள்

4. மயிலாடுதுறை - காளியம்மாள் - 1,27,642 வாக்குகள்

5. திருவள்ளூர் - ஜெகதீஷ் சுந்தர் - 1,20,838 வாக்குகள்

6. துாத்துக்குடி - ரொவீனா ரூத் ஜோன் - 1,20,300 வாக்குகள்

7. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர் - 1,20,293 வாக்குகள்

8. பெரம்பூர் - தேன்மொழி - 1,13,092 வாக்குகள்

9. காஞ்சிபுரம் - சந்தோஷ்குமார் - 1,10,272

10. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ் - 1,07,458

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+