Year Ender 2025: 2025ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 முக்கிய சொற்கள்! ரொம்ப ஆச்சர்யமா இருக்கே!
சென்னை: 2025-ம் ஆண்டில் உலகம் முழுக்க இணைய பயனர்கள் அதிகமாக கூகுளில் தேடிய சொற்களில் சில மிகவும் சுவாரஸ்யமானவை. தொழில்நுட்பம், அரசியல், விளையாட்டு, சர்வதேச நிகழ்வுகள் உள்ளிட்ட பல துறைகளில் மக்கள் ஆர்வத்துடன் தேடிய இந்த 10 சொற்கள் பற்றிய விவரத்தை எளிமையாக பார்க்கலாம்..
2025ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்த 10 சொற்களும், உலக மக்களின் ஆர்வம் எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகின்றன. குறிப்பாக AI, கிரிக்கெட், சர்வதேச அரசியல் ஆகிய சொறேகள் மக்களிட அதிக கவனத்தைப் பெற்றுள்ளன.
ஜெமினி, டீப் சீக், இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடர், ஆசியக் கோப்பை, இந்தியா-பாகிஸ்தான், ஐபோன் ஆகியவை 2025ஆம் ஆண்டி அதிகம் தேடப்பட்டுள்ள சொற்கள் என்கிறது கூகுள்.

1. ஜெமினி (Gemini)
2025-ம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட முதல் சொல் ஜெமினி. இது கூகுள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு. வேலை, கல்வி, எழுதுதல் போன்ற பல துறைகளில் ஜெமினியை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியதால், அதன் அம்சங்கள் மற்றும் அப்டேட்கள் குறித்து பெருமளவில் தேடினர்.
2. India vs England
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் மிகப்பெரிய சென்சேஷனாக மாறியது. போட்டி அட்டவணை, நேரலை ஸ்கோர், வீரர்கள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றுக்காக அதிகமாக தேடப்பட்டது.
3. சார்லி கிர்க் (Charlie Kirk)
அமெரிக்க அரசியல் கருத்து கூறுபவரான சார்லி கிர்க், பேசும் முறையும் சர்ச்சைகளும் காரணமாக பல முறை செய்திகளில் இடம்பிடித்தார். இதனால் அவரைப் பற்றிய தேடல்கள் அதிகரித்தன.
4. FIFA கிளப் வேர்ல்ட் கப் (FIFA Club World Cup)
கால்பந்து ரசிகர்கள் உலகம் முழுவதும் இந்த தொடரை ஆர்வத்துடன் பின்தொடர்ந்தனர். அதனால் இந்த போட்டி தொடர்பான தேடல்கள் அதிகரித்தன.
5. India vs Australia
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளும் வழக்கம்போல ரசிகர்களை ஈர்த்தன. போட்டி முடிவுகள், ஹைலைட்ஸ், வீரர்கள் போன்ற விவரங்களுக்கு மக்கள் கூகுளை நாடினர்.
6. டீப் சீக் (DeepSeek)
புதிய AI தளமான டீப் சீக் குறித்த ஆர்வமும் அதிகம். இது மற்ற AI கருவிகளிலிருந்து எப்படி வித்தியாசமானது என்பதை தெரிந்துகொள்ள மக்கள் தேடினர்.
7. ஆசியக் கோப்பை (Asia Cup)
ஆசிய நாடுகளின் முக்கிய கிரிக்கெட் போட்டியான இதை, இந்தியா உட்பட பல நாடுகளில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பின்தொடர்ந்தனர். அதனால் இது கூட ட்ரெண்ட் பட்டியலில் இடம் பிடித்தது.
8. ஈரான் (Iran)
சர்வதேச அரசியல், மத்திய கிழக்கு பதற்ற நிலை போன்ற காரணங்களால் ஈரான் உலக செய்திகளில் அடிக்கடி வந்தது. அதனால் அந்த நாட்டை பற்றிய தகவல்களுக்கு தேடல் அதிகரித்தது.
9. ஐபோன் 17 (iPhone 17)
புதிய ஐபோன் குறித்து உலகம் முழுக்க பயனர்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். கசிந்த தகவல்கள், அம்சங்கள், வெளியீட்டு தேதி போன்றவற்றுக்காக மக்கள் கூகுளில் தேடினர்.
10. India-Pakistan
இந்தியா-பாகிஸ்தான் என்ற சொல்லை மக்கள் அரசியல், கிரிக்கெட், எல்லைப் பதற்றம் போன்ற பல காரணங்களுக்காக அதிகம் தேடினர். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாறு, போர், ஆபரேசன் சிந்தூர் ஆகியவை இதற்கு முக்கிய காரணம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications