இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 27/02/2026: திமுகவில் ஓபிஎஸ்! அரசியலில் ஹாட் டாப்பிக்!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், இன்று திமுகவில் இணைந்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அவரது திமுக இணைப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.

முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளார் ஸ்டாலின். தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார். திமுகவில் இணைந்தது பெருமகிழ்ச்சி.
டி.கே.எஸ். இளங்கோவன்
ஓபிஎஸ் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தல் களத்தில் பணியாற்றவிருக்கிறார். அவருக்கு என்ன மாதிரியான பொறுப்புகள் வழங்கப்படும் என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்.
தமிழிசை சவுந்திரராஜன்
திமுகவில் இணைந்ததை தாய் கழகத்திற்கு வந்ததை போல் உணர்கிறேன் என ஓபிஎஸ் சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாகதான் நான் எடுத்துக் கொள்கிறேன். ஓபிஎஸ்ஸின் திமுகவின் சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப் பெரிய பாதகமாக அமையும்.
சசிகலா
தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு தீயசக்தியாக திமுக விளக்கும் நிலையில் தாய்க் கழகம் என நினைத்துக் கொண்டு திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது தவறான முடிவு. அவரது இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.
கே.பி.முனுசாமி
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது வெட்கக்கேடானது. சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ்.
ஓ.ரவீந்திரநாத்
தேனி அ.தி.மு.க கோட்டை என்பது எல்லாம் நாங்க இருந்தது வரைக்கும் தான்.. இப்போ அது ஓட்டை
மார்க்சிஸ்ட் சண்முகம்
பாஜக அதிமுக கூட்டணியை முறியடிக்கும் வகையில் யார் இந்த அணிக்கு வலு சேர்த்தாலும் நல்லது, வரவேற்கிறோம்
நயினார் நாகேந்திரன்
அதிமுகவில் அமைச்சராக முதல்வராக இருந்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அவரது விருப்பம்.
வைகைச்செல்வன்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான பணிகளில் தானும் இணைந்துகொள்ள வேண்டும். இடையூறாக இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நசுக்கி, அதை அடித்து நொறுக்கி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது ஆட்சி கவிழ வேண்டும் என்று நினைத்து எதிர்த்து வாக்களித்தவர்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கானவர்களா?
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!











Click it and Unblock the Notifications