Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 22/02/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை! தலைவர்களின் நச் பாயிண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் (tamil nadu assembly election 2026) நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல் தெறிக்க கருத்துகளை பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் பேச்சுக்களை இங்கே சுருக்கமாக காணலாம்.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, அரசியல் மாநாடு, நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் என்று தொடர்ந்து கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம். இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (22/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

Tamil Nadu Assembly Election 2026

முதல்வர் ஸ்டாலின்

வேறு எங்கும் இல்லாத வகையில் திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காக ரெய்டுகள் நடக்கின்றன. எங்களை மிரட்டி பார்க்கிறார்கள். மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்களா நாங்கள்.. வேமனிதம், மனிதர்களை அழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜகவின் சதியில் தமிழகம் சிக்கிவிடக் கூடாது. இந்த தேர்தல் என்.டி.ஏ மற்றும் திமுக இடையே தான். இதில் தமிழகம் நிச்சயம் வெல்லும். கமல் பேச்சு சிலர் புரியாமல் இருப்பதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு புரியத் தான் செய்யும். ஆனால் புரிந்துக் கொள்ளக்கூடாது என நினைக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, பயங்கரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு. ஏற்கனவே 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, "சிலிண்டர் வெடிப்பு" என சமாளிக்கவே முயன்றது இந்த விடியா திமுக அரசு.

டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ATS (Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டு இருந்தது? இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது.

சீமான்

இந்த தேர்தலில் காரைக்குடியில் நான் போட்டியிடுகிறேன். எங்களுடைய கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல.. ஆட்சி முறை மாற்றம். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே எங்கள் இலக்கு. இங்கே மக்களுக்கான அரசியல் இல்லை. செய்தி மற்றும் விளம்பர அரசியல் மட்டுமே இருக்கிறது. சேவை மற்றும் செயல் அரசியல் இல்லை. 5-வது முறையாக சீட்டுக்கும், நோட்டுக்கும் விலை போகாமல் தனித்து நிற்கின்றது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.

கடந்த 2016 தேர்தலில் வெறும் 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். மற்ற கட்சிகளாக இருந்தால் தடம் தெரியாமல் போயிருக்கும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்..

கடம்பூர் ராஜூ

விஜய்யை பாத்து தி.மு.கவுக்கு பயம் வந்துவிட்டது. இதனால் தான் வருகிறவர் போகிறவர்கள் என எல்லா கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து வருகிறார்கள். இப்போது அது ஓவர் லக்கேஜ் ஆகிவிட்டது.

எல் முருகன்

தமிழக மக்கள் திமுக எனும் அரக்கனிடம் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். திமுகவிடம் இருந்து தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என நரசிம்மர், ஆஞ்சநேயரிடம் வேண்டி கொண்டேன். அமைச்சர் நேரு விவகாரம் திமுகவின் ஊழல், எந்த அளவிற்கு தமிழகம் சீரழித்திருக்கிறது என்பதை காட்டுகிறது.

செல்வப்பெருந்தகை

திமுகவுடன் பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடக்கிறது. காங்கிரஸ் தலைமை தமிழ்நாடு சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இனி யாரும் முரண்பாடாக பேச மாட்டார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

வானதி சீனிவாசன்

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்கு என்ன தனிப்பட்ட காரணத்திற்காக போயிருக்கிறார் என தெரியாது. அதிமுக அவருக்கு நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் என்கின்ற உயர்ந்த அங்கீகாரத்தை கொடுத்தது. ஒரு புதிய கட்சி வரும் போது ஏற்கனவே இருக்கின்ற கட்சியில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறார்களோ அல்லது தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பிரேமலதா விஜயகாந்த் எடுத்த முடிவு என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கிறோம். தமிழகத்தின் நலன் கடந்த ஐந்தாண்டுகளாக எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதை புரிந்த பிறகும் கூட திமுக கூட்டணியில் அவர் இணைந்து இருக்கிறார் என்பது தமிழகத்தின் நலனை பிரேமலதா விஜயகாந்த் சிந்திக்கவில்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது.

லோகேஷ் தமிழ்செல்வன்

அதிமுகவில் தற்போது என் தந்தைக்கு(தனபால்) மதிப்பு கொடுப்பதில்லை. குறிப்பிட்ட சிலர் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். என் தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கூட யாரும் வந்து பார்க்கவில்லை. நீலகிரி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்துவிட்டு முதுகில் குத்தினர்.

நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் விஜய் செல்லும் இடம் எல்லாம் நாம் தமிழர் கட்சி சமாதி அடைந்து வருகிறது. திமுகவை எதிர்த்து துவங்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் சரணாகதி அடைந்து விட்டது. நான் பல மேடைகளையும் பலரையும் அரசியலில் பார்த்தவன். ஆனால் இதுவரை விஜய்க்கு கூடிய கூட்டம் எந்த அரசியல் கட்சிக்கும் கூடியது கிடையாது.

இன்பநிதி - உதயநிதி விஜயின் ஜனநாயகன் படத்திற்கு எதிராக சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை வெளியிட்டு தோல்விதான் மிச்சம். சிவகார்த்திகேயனை முடக்கியது போல் தற்போது ரஜினிகாந்தையும் கமலஹாசனையும் முடக்குவதற்காக இன்பநிதி உதயநிதி வைத்து சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. நடிகர் வடிவேலு பிரபலமாக இருந்த நிலையில் விஜயகாந்துக்கு எதிராக அவரை பேச வைத்து அவரின் சினிமா வாழ்க்கையை முடித்து வைத்தவர்கள் திமுகவினர்.

கமல்ஹாசன்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. எனக்கு பேச்சுவார்த்தை கிடையாது. எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை இப்போது சொல்ல முடியாது. கூட்டணியில் ஒற்றுமையும், நோக்கமும் முக்கியமானது. கூட்டணிக்கு ஓ. பன்னீர்செல்வம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் வருக.

ஜிகே வாசன்

அதிக அளவு சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதனால் இளைஞர்களும், மகளிரும் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகி விட்டனர். முரண்பாட்டின் மொத்த வடிவமாக திமுக கூட் டணி உள்ளது. எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும், முதல் கூட்டணி, வெற்றி கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணி தான்.

கி வீரமணி

இந்த தேர்தல் சமூக, பெண்ணுரிமைக்கான போராட்டம்.. எனவே எல்லோரையும் விட பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பல சலுகைகள் வந்துள்ளன. பெண்களுக்கு உரிமை மிக முக்கியம். எனவே இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும். திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி வந்தால்தான், பெண்ணுரிமை பாதுகாக்கப்படும் என்பதை எடுத்து சொல்லுங்கள்..

பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழகத்தில் அதிமுக தன் தனித்துவத்தை இழந்து வருகிறது. அதிமுக இடத்தை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிடித்துவிட்டது. முதலில் அதிமுக இடத்தை பாஜக பிடிக்க நினைத்தது. ஆனால் விஜய் அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். தமிழத்தில் திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கிறது. விஜய்க்கு மக்கள் ஆதரவு கூடிக்கொண்டே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+