இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 19/02/2026: ஸ்டாலின் முதல் வைகோ வரை! தலைவர்களின் நச் கருத்துகள்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) இன்னும் இரு மாதங்களில் நடக்க இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என இப்போதே அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (19/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

முதல்வர் ஸ்டாலின்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
எடப்பாடி பழனிசாமி
என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே! இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் ஸ்டாலின்.
பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு. 7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்.. இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்.... (ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!)
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக நிர்வாகிகள் விருப்பம் திமுக உடன் கூட்டணி அமைப்பது. அந்த வகையில் இந்த கூட்டணி, விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அமைந்துள்ளது. 2016ஆம் ஆண்டிலேயே திமுக - தேமுதிக கூட்டணி அமைந்திருக்க வேண்டியது. அப்போது பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்று கருணாநிதி கூறி இருந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி அமைந்துள்ளது. எங்கள் கூட்டணி அமோக வெற்றியை பெறும்.
நயினார் நாகேந்திரன்
உதவிப் பேராசிரியர் தேர்வின் முடிவை நிதி நெருக்கடி காரணமாக திமுக அரசு வெளியிடாததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஐந்தாண்டுகளாக தேர்வை நடத்தாமல் ஒத்திவைப்பதும், தேர்தல் காலம் வந்ததும் கண்துடைப்புக்காக ஒரு தேர்வை நடத்துவதும், பின் தேர்வு முடிவை வெளியிடாமல் மெத்தனமாக இருந்து, பட்டதாரிகளின் வேலைவாய்ப்பையும், கல்லூரி மாணவர்களின் படிப்பையும் பாழாக்குவது தான் திமுக அரசின் இளைஞர் நலனா?
சீமான்
தம்பியை (விஜய்யை) குறை சொல்வது என்னுடைய வேலை இல்லை. நான் என் வேலையை செய்கிறேன். ஸ்டாலின் வெளியேறினால் "இந்தியா கூட்டணி" வெறும் எழுத்தில் தான் இருக்கும். 'இந்தியா கூட்டணி'யில் வலுவாக இருப்பது முதல்வர் ஸ்டாலின் தான்.
தமிழக அரசு வாங்கிய கடனுக்கு வட்டியாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் கட்டிக்கொண்டு இருக்கிறோம். இலவசமாக வேட்டி சேலைகள் கொடுக்கும் அரசு குவாட்டரையும் இலவசமாக கொடுக்கலாமே? இலவசம் என சொல்லிவிட்டு மின் கட்டணம், சொத்து வரி போன்றவற்றை உயர்த்துகிறார்கள். தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கும் நாடு பொருளாதார அடிமையாக மாறிவிடும்.
வைகோ
தேமுதிக வந்ததன் மூலம் திமுக கூட்டணி மேலும் பலமாகியுள்ளது. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். தேர்தல் நிதி வசூலிப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தற்போது மற்ற கட்சிகளிடம் ஏராளமான நிதி இருக்கிறது. ஆனால், மதிமுக-விடம் அப்படி ஒரு நிலை இல்லை. புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை..
எ வ வேலு
அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக வட்டி கட்டி வருகிறோம். அதிமுக கொண்டு வந்ததற்கான 11 கல்லூரிகளுக்கான வட்டியையும் திமுக தான் செலுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் தான் அதிக கடன் வாங்கப்பட்டதாக தவறான தகவல் பரப்புகிறார்கள்.
தமிழிசை சவுந்தரராஜன்
என்னை அக்கா என்று கூப்பிட்டால் போதும்.. தமிழ்நாட்டிற்கு ஒரே அம்மா தான்.. அது ஜெயலலிதா தான். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன்
எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கிறேன். அரசியல் என்பது மக்களுக்கானது. தனி ஒருவருக்கானது அல்ல. எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடாது.. அதே நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிக்கு ஆதரவு அளிப்போம்.
வேல்முருகன்
வீட்டுக்கு ஒருவர் அந்த நடிகருக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்று பேசி வருகிறார்கள். நன்றாக நடனம் ஆடுகிறார். பாட்டுக்கு உதடு அசைக்கிறார். என்பதால் அவருக்கு வாக்களிக்க போவதாக கூறுகின்றனர். அவரை போன்றவரை சிஎம் ஆக எப்படி என்னால் எண்ணி பார்க்க முடியும். புரிதலற்ற சமூகமாக இளம் தலைமுறை மாறியதாலயே இந்த நிலை..
நாஞ்சில் சம்பத்
தவெகவுடன் ஒரு தேசிய கட்சி கூட்டணிக்கு வர உள்ளது. இதேபோல் ஒரு மாநில கட்சியும் தவெகவுடன் கூட்டணி வர இருக்கிறது.
திவ்யா சத்யராஜ்
விஜய்க்கு ஒரு சவால் விடுகிறேன்.. உங்களால் பேப்பரை பார்த்து படிக்காமல் உங்க கட்சியில் இருக்கிற தொண்டர்கள் 10 பேரின் பெயரை சொல்ல முடியுமா.. கரூரில் 41 பேர் இறந்துவிட்டார்கள்.. சேலத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.. இதற்கு எல்லாம் நீங்க தான் பொறுப்பு. ஆனால் இதற்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்லவே இல்லை..
-
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்?












Click it and Unblock the Notifications