இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 7/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை தலைவர்களின் அனல் கருத்துகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி தலைவர்கள் பிரசாரக்கூட்டம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் முதல் நாம் தமிழர் கட்சியின் சீமான் வரை கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. மார்ச் 15 அல்லது மார்ச் 16ம் தேதியில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அந்தவ கையில் திமுக - அதிமுக கட்சிகள் தங்களின் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களும் ஓட்டு சேகரிப்பை தொடங்கி உள்ளனர்.
இதுதவிர ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி தங்களது எதிர் கூட்டணி, எதிரான கட்சிகளை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகளை, இன்றைய டாப் 10 பேச்சில் (7/03/2026) நறுக்கென்று உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
ஸ்டாலின்
முதல்வர் முக ஸ்டாலின், ''கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கருணாநிதியுடன் கரம்கோத்து நின்றவர் அன்பழகன். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய் வழிக்காட்டியாய் இருந்தவர். நட்புக்கும் - கொள்கை பற்றுக்கும் இலக்கணமாக திகழ்ந்த அன்பழகன் நினைவு நாளில் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்.. உழைப்போம்'' என கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட நிறைவேற்றி தராமல் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 13ல் சென்னை பல்லவன் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணத்தை முடித்துள்ளன. அவர்கள் அறிக்கை சமர்ப்பித்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும். நான் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டேன். வரும் தேர்தலில் தலைவர் (முக ஸ்டாலின்) என்ன முடிவெடுக்கிறாரோ அந்த தொகுதயில் போட்டியிடுவேன்'' என்றார்.
செல்வபெருந்தகை
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, ''சமையல் எரிவாயு சிலிண்டர் விலையுயர்வு பொதுமக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்படுத்தும். எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று கூறி வரும் நிலையில் விலையை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன், ''எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானால் அந்த நாற்காலியில் தொடர்ந்து அவரால் அமர்ந்து இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. நிதிஷ் குமாருக்கு நேர்ந்த கதி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். எடப்பாடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காப்பாற்றிய திராவிட இயக்கமான அதிமுகவை கரைய விட்டுவிடாதீர்கள்'' என்றார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''தமிழ்நாட்டின் எல்லையை தங்கம் எல்லையென அறிவிப்பு பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. உடனடியாக அகற்றப்படாவிட்டால் மாபெரும் எல்லை மீட்பு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்'' என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ''விஜய் மனைவி சங்கீதாவுக்கு நியாயம் கிடைத்திட வேண்டும். அவர் சிரமத்தில் இருக்கிறார். கொடுமைக்கு ஆளாகி உள்ளார். அது தடுக்கப்பட வேண்டும்'' என்றார்.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
தவெகவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ? நிலைமை என்ன ஆகும்? - சட்டசபையில் சமாளிப்பாரா விஜய்? -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
Vijay: சைக்கிள் ஓட்டியபோது ரசிகர் எறிந்த பூக்கள்! வெடிகுண்டுனு நெனச்சி கேரவனுக்குள் ஓடினாரா விஜய்? -
அழகர்சாமி நாயுடு பேரன் என்பதால் விஜய பிரபாகரனுக்கு ஆதரவு! ஜாதி அரசியலை கையிலெடுத்த மாணிக்கம் தாகூர் -
தெற்கில் தேர்தல், தகிக்கும் மபி.! எல். முருகனை வைத்து பாஜக போடும் மெகா பிளான்! சிக்கலில் காங்கிரஸ்? -
உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் வரலையா? வெறும் 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்யலாம்.. எப்படி? -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு?












Click it and Unblock the Notifications