லீக் ஆன ஆடியோ.. "அவங்க" இங்கே வர்றாங்களாம்.. திகைத்து பார்க்கும் திமுக.. "லோட்டஸ்" கருகுமா? மலருமா?
அண்ணாமலை 2 விதமான முக்கிய வியூகங்களை கட்சிக்குள் எடுத்து வருகிறாராம்
சென்னை: 2 முக்கியமான அரசல் புரசல்கள் தமிழக பாஜகவில் ஓடிக் கொண்டிருக்கிறது.. இதன் உண்மைதன்மை என்னவென்று உறுதியாக தெரியாவிட்டாலும், இது தொடர்பான தகவல்கள் பரபரப்பை கிளப்பி விட்டு வருகின்றன.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, தனித்து போட்டியிட்ட வரலாறு கிடையாது.. ஏதாவது ஒரு திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்தித்து பயணித்து வந்துள்ளது..
அதேசமயம், தங்கள் பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்வதும் கிடையாது.. ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறது..

வீக்னஸ் 2
அதிமுகவுக்கு தங்கள் பிரச்சனையை சமாளிக்கவே நேரம் போதவில்லை என்பதால், பாஜகவும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு வருகிறது.. கட்சியும் நிஜமாகவே வளர்ந்து வருகிறது. எடப்பாடியை சமாதானம் செய்துகொண்ட கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது, அல்லது எடப்பாடி டீம் இல்லாமலேயே 3வது அணி அமைப்பது என்ற 2 பெரும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.. தேர்தல் முன்னெடுப்புகள் இப்படி நடந்து கொண்டிருக்கிறது என்றால், கட்சியை பலப்படுத்துவதும், விஸ்தரிப்பதும், களையெடுப்பதும் என கட்சிக்கு உள்ளேயே விறுவிறுப்புகள் தொடங்கி உள்ளதாம்.. அந்த வகையில்தான் 2 விஷயங்கள் முணுமுணுக்கப்பட்டு வருகின்றன.

லீக் ஆடியோ
முதலாவதாக, அண்ணாமலைக்கு எதிராக ஒரு க்ரூப் கட்சிக்குள்ளேயே கிளம்பி உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு பல்வேறு மீடியாக்களில் செய்திகள் கசிந்தன.. இதற்கு சில காரணங்களும் அப்போது சொல்லப்பட்டன.. அண்ணாமலை மீதுள்ள அதிருப்தியால், தலைமையை மாற்ற வேண்டும் என்று ஒருசிலர் கொளுத்தி போட்டதாக தெரிகிறது.. ஆனால், அண்ணாமலை விழித்து கொண்டுவிட்டாராம்.. பாஜக மாவட்ட தலைவர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று அண்ணாமலைக்கு கிடைத்ததாம். அதில், "என் பதவியில் இருந்து அண்ணாமலையை தூக்கவே முடியாது" என்று சவால்விட்டு பேசியிருந்தாராம்.

42 + 10 நிர்வாகிகள்
இதுபோல மேலும் சிலரது தகவல்கள் அண்ணாமலைக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதனால்தான் அவர்கள் எல்லாம் யார் என்று பார்த்து, லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாம்.. இதுபோக செயல்படாத மா.செ.க்கள், நிர்வாகிகள், பொறுப்பற்ற பொறுப்பாளர்கள் போன்றோர்களின் லிஸ்ட்டும் ரெடியாகி உள்ளதாம்.. மொத்தம் 42 நிர்வாகிகளுக்கு கட்டம் கட்டப்பட்டுள்ளதாம்.. இவர்களின் பதவியை பறித்தால்தான் வரும் தேர்தலில் 10 சீட்டுக்களையாவது வெல்ல முடியும் என்று நினைக்கிறதாம்.. களையெடுப்பு தொடர்பான லிஸ்ட்டும் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.. தீபாவளி முடிந்ததுமே இது தொடர்பான மாற்றங்கள் இருக்கும், அதற்கு பிறகு கட்சி இன்னும் சுறுசுறுப்பாக செயல்படும் என்கிறார்கள்.

பிகே டீல்
இன்னொரு பக்கம், தேர்தல் வியூகம் தொடர்பான பேச்சும் தமிழக பாஜகவுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.. அண்ணாமலையின் அமெரிக்க பயணத்தில் இதற்கான அச்சாரம் போடப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.. அதாவது, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அமெரிக்காவில் முன்பு பணியாற்றிய நிறுவனத்திடம் முக்கியமான டீல்கள் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்..

களையெடுப்பு
பிரசாந்த் கிஷோர் கடந்த முறை திமுகவுக்காக பணியாற்றி, பெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளார்.. இப்போது காங்கிரஸ் பக்கம் இருக்கிறார் என்றாலும், அவரையே உருவாக்கின கம்பெனியை, தன்வசமாக்கி உள்ளதாம் தமிழக பாஜக.. ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், தமிழக பாஜகவுக்கு இது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.. ஆக, ஒருபக்கம் களையெடுப்பு, இன்னொருபக்கம் வியூகங்கள் என கேம் ஸ்டார்ட் செய்துள்ளது கமலாலயம்..!!!












Click it and Unblock the Notifications