தங்கம் விலை உயர்வு பின்னணியில் 3 காரணங்கள்! தங்கம் விலை எப்போது குறையும்? ரேட் கட் இப்போதில்லை?
சென்னை: தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டியபடி உள்ளது. இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. அது என்ன, எப்போது வரை தங்கம் விலை அதிகரிப்பு தொடரும். இதோ பார்க்கலாம், வாங்க..
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க இருப்பதாக எதிர்பார்ப்பு நிலவுவதால், தங்கத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் பலவீனம் இருப்பதாகக் கருதப்படுவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கின்றனர். உதாரணத்திற்கு, உலகளாவிய அளவில், புதிய வீடுகள் கட்டுமானம் குறைந்துள்ளது, இது பொருளாதாரம் மந்தமாக இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

புவிசார் அரசியல், ராணுவ பதட்டங்களும் தங்க விலையை உயர்த்துவதற்கு பங்களித்துள்ளன. இஸ்ரேல், ஈரான், சிரியா, ரஷ்யா என பதற்றங்களை அதிகரிக்கும் நாடுகள் லிஸ்ட் கூடுகிறதே தவிர குறையவில்லை. ஆக மொத்தம் இந்த 3 காரணங்களும் தங்கம் விலையை உயர்த்தியபடியே உள்ளன. நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய முக்கிய விஷயம்.. தங்கம் விலை உயர்வுக்கும் உள்ளூரில் நாம் கல்யாணம், திருவிழா காலங்களில் வாங்கும் நகைகளுக்கும் தொடர்பே கிடையாது என்பதுதான். தங்கம் விலை எப்போதுமே சர்வதேச அளவிலான பெரிய காரணங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும்.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் ராணுவ மோதல்கள் மற்றும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகும் சாத்தியக்கூறுகள் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கித் தள்ளுகின்றன என்கிறார்கள். தங்கம் விலை எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக உயரும் என்று பல நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இருப்பினும், குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். அப்போது நகைகளை வாங்குவதற்கு நீங்கள் பிளான் செய்துகொள்ள வேண்டியதுதான். தங்கத்திற்கான நீண்ட கால விலைவாசி, உயர்வு பாதையில்தான் இருக்கப்போகிறதாம்.
புவிசார் அரசியல் பதட்டங்கள் நீடிப்பதாலும், பொருளாதார குறியீடுகள் கலவையாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. தங்கம் தற்போது முதலீட்டாளர்களிடையே மிகவும் முக்கியமான பாதுகாப்பு சொத்தாக மாறியுள்ளது. மொத்தத்தில் சொல்வது என்றால், வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு, பொருளாதார கவலைகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவை தங்கம் விலையை உயர்த்துவதற்கான முக்கிய காரணங்களாகும்.
சென்னையில் 10 கிராமுக்கான ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூ.71804.0 என்ற அளவிலும் நேற்றுமுன்தினம் 16-08-2024 10 கிராமுக்கு ரூ.72492.0 என்ற அளவிலும், கடந்த வாரம் 11-08-2024 அன்று ரூ.71753.0 என்ற அளவிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications