டாப் 4 கோடீஸ்வர வேட்பாளர்கள்: அ.தி.மு.க பர்ஸ்ட்; தி.மு.க செகண்ட்.. அட.. கமலும் இதில் இருக்கிறாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த தேர்தலில் அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர் ஆளும் கட்சியான அதிமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையாதான்.

மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசன், மகேந்திரன் என 2 பேர் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் டாப்பில் உள்ளனர்.

வலுவான வேட்பாளர்கள்

வலுவான வேட்பாளர்கள்

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தொகுதிகளிலும் தாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள், நிறைவேற்றப் போகும் திட்டங்களை முன் வைத்து தலைவர்கள் வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். இவற்றுக்கு எல்லாம் முக்கியமானவர்கள் அந்தந்த தொகுதியின் வேட்பாளர்கள்தான். இந்த தேர்தலில் ஒன்றுக்கு, ஒன்று சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் அனைத்து தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பல மடங்கு அதிகரித்த சொத்து மதிப்பு

பல மடங்கு அதிகரித்த சொத்து மதிப்பு

வேட்பாளர்கள் வேட்மனு தாக்கல் செய்யும்போது அவர்கள் சொத்து குறித்த விவரங்கள் கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் தமிழகத்தில் சில வேட்பாளர்களின் சொத்து விவரங்களை பார்த்து சிலர் மயக்கமே போட்டு விட்டனர் என்றே கூற வேண்டும். ஒரு சில வேட்பாளர்களின் சொத்து மதிப்பு முன்பு இருந்ததை விட பல மடங்கு உயர்ந்து இருந்தது. சிலர் நேர்மையாக சொத்து மதிப்பை காட்டினாலும், பலர் சொத்து மதிப்பை குறைத்து காட்டினார்கள்.

அதிமுகதான் டாப்

அதிமுகதான் டாப்

இந்த தேர்தலில் அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர் ஆளும் கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்தான். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்பு 246 கோடியே 73 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த தேர்லில் அதிக சொத்துள்ள டாப் 1 வேட்பாளர் இவர்தான். அடுத்த இடத்தை பிடித்த வேட்பாளர் எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்.சென்னை அண்ணா நகரில் போட்டியிடும் எம்.எல்.ஏ. எஸ்.மோகனின் சொத்து மதிப்பு 211 கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஏ. எஸ்.மோகன் கடந்த 2016 தேர்தலில் 170 கோடியுடன் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களில் இரண்டாம் இடத்தை பிடித்தவர்.

கமலஹாசனுக்கும் இடம்

கமலஹாசனுக்கும் இடம்

இந்த தேர்தலில் அதிக சொத்துள்ளவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு சொந்தக்காரர் டக்கென்று இவரா? என்று யாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர்தான். இந்த தேர்தலில் நம்பிக்கையுடன் களம் இறங்கி இருக்கும் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 176 கோடியாக உள்ளது. அடுத்த இடத்தை பிடித்து இருப்பவரும் இதே மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்தான். சிங்காநல்லூர் தொகுதி வேட்பளார் மகேந்திரனின் சொத்து மதிப்பு 161 கோடியாக இருக்கிறது. சொத்து மதிப்பில் முதல் நான்கு இடங்களை பிடித்த இவர்கள், மக்கள் மனதிலும் உயர்ந்த இடத்தை பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+