பாகிஸ்தானில் அடுத்தடுத்து ‘உருளும்’ டாப் தலைகளின் தலை.. சீக்ரெட் ஏஜெண்ட் வேலையா? உற்றுநோக்கும் உலகம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து பல தீவிரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு வருவது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் அஜீஸ் ஈசார் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஸ் இ முஹம்மத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் மசூத் ஆசார் உள்ளிட்ட பலர் பாகிஸ்தானில் தான் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் பல முக்கிய தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். பிற நாடுகளின் உளவாளிகள் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வியும் சர்வதேச அளவில் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் அஜீஸ் ஈசார் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜெய்ஷ் இ முஹம்மத் இயக்கத்தில் முக்கியமான இடத்தை வகித்த ஈசார், இந்தியா குறித்த எதிர்க் கருத்துகளை பேசுவதில் முக்கியமாக இருந்தவர். இந்நிலையில், இவரது உடல் இன்று அதிகாலை அவரது நெருங்கிய உதவியாளரால் வீடு அருகே காண்டெடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் சந்தேகத்திற்கிடமானதாக அவரது மரணம் இருந்ததாகவும், உடலில் காயம் எதுவும் இல்லையெனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெய்ஷ் இ முஹம்மத் இயக்கத்தினர் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ள தகவல்படி, "ஈசார் துப்பாக்கி சூட்டில் கொல்லப்படவில்லை" எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவர் இறந்த காரணம் பற்றிய தகவலை அவர்கள் பகிரவில்லை. இது அவரது மரணம் இயற்கையானதா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளும், உளவுத்துறையும் தீவிரமாக விசாரணையை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, அவரது இறப்பிற்கு பின்னால் உள்ள உள்நாட்டு அமைப்புகளா அல்லது வெளிநாட்டு உளவாளிகளா? என்பதையும் ஆராய்ந்து வருகிறார்கள். பாகிஸ்தானுக்குள் உள்ள தீவிரவாத இயக்க தலைவர்களின் திடீர் மரணங்கள் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்துல் அஜீஸ் ஈசாரின் மரணமும் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
அப்துல் அஜீஸின் மரணம் மட்டுமல்ல. இதற்கு முன்பும் பாகிஸ்தானில் பல முக்கிய தீவிரவாத தலைவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். 2021-ல் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதி அலி ஹம்சா மரணமடைந்தார். பஞ்சாபில் அவரது காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக உயிரிழந்தார் என கூறப்பட்டது. ஆனால் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை இருக்கலாம் என சில ஊடகங்கள் தெரிவித்தன.
2020-ல், ஹர்கத்து உல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் முஹம்மத் அமீன், மொக்சா நகரில் அவரது வீட்டில் மர்மமான தீயில் சிக்கி உயிரிழந்தார். பின்னர் அதற்கும் உளவுத்துறை பங்கு இருக்கலாம் என நம்பப்பட்டது. 2018-ல், ஜெய்ஷ் இ முஹம்மத் தலைவர் மஸூத் அசாரின் சகோதரரான இப்ராஹிம் அசார், மிர்பூர் பகுதியில் திடீரென உயிரிழந்தார். அவரும் சர்ச்சைக்குரிய நபராக இருந்ததால் இன்று வரை அவரது மரணத்தில் சந்தேகம் நீடிக்கிறது.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications