மலையாள திரையுலகமே ஆடிப்போச்சு.. ஒரே நேரத்தில் சுற்றி வளைக்கப்பட்ட டாப் நடிகர்கள்.. காரணம் என்ன?
சென்னை: மலையாள நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலையில் இருந்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 17 இடங்களில் சோதனை நடைபெறும் நிலையில் மலையாள நடிகர்கள் வீட்டில் ஒரே நேரத்தில் ஏன் இந்த சோதனைக்கான காரணம் என்பதை இங்கு பார்க்கலாம்.
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல், மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் பூடானில் இருந்து சட்டவிரோதமாக சொகுசு கார்களை கடத்தி முறைகேடாக விற்பனை செய்த விவகாரத்தில் இந்த சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 17 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஆடம்பர சொகுசு கார்கள்
சென்னை அபிராமி புரத்தில் உள்ள துல்கர் சல்மானின் இல்லத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூசர், டிஃபெண்டர் மற்றும் மசெரட்டி போன்ற ஆடம்பர சொகுசு கார்களை சட்டவிரோதமாக இந்தியா - பூடான் / நேபாளம் வழியாக இறக்குமதி செய்து பதிவு செய்து நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
கார் இறக்குமதியில் கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணம், அந்நிய செலாவணி மூலம் பயன் அடைந்தவர்கள் யார்? என்பது குறித்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இந்த கார்களை துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோர் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது.
எதற்காக இந்த சோதனை
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், அவர்களது காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலமாக இந்த சொகுசு கார்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அந்நிய செலாவணி முறைகேட்டில் பலன் அடைந்தவர்கள் யார் யார்? பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளவே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதா? பணம் எதுவும் பறிமுதல் செய்யப்பட்டதா? என்பது சோதனை முடிவுக்கு பிறகே தெரிய வரும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
FEMA சட்டம் பிரிவு
FEMA சட்டம் பிரிவு 3, 4 விதிகளை மீறியதற்கான முகாந்திரம் கண்டறியப்பட்டதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நிய செலாவணி முறைகேடு, ஹவாலா வழியாக எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை ஆகியவை மூலமாக இந்த கார்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு 39 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 150-200 கார்கள் இப்படி முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று சுங்கத்துறை தெரிவித்தது. துல்கர் சல்மான், அமித் சக்கலக்கல் ஆகியோருக்கு சொந்தமான கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிரித்விராஜ் வீட்டிற்கு அதிகாரிகள் சென்ற போதிலும், அவரது வீட்டில் இருந்து கார்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications