டாப் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள்: முதல் இடத்தில் சச்சினா? கோலியா? தல தோனிக்கு எவ்வளவு சொத்து?
சென்னை: 2024 ஆண்டுக்கான இந்தியப் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் குறித்த பட்டியல் ஒன்று தற்போது வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் சொத்து மதிப்பு வானத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது பணம் காய்த்து தொங்குகின்ற மரம் என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். நன்றாக விளையாடினால் அணியில் பணம் பார்க்கலாம். அப்படியில்லையா, அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். ஆக, இந்தத் துறை பலருக்கும் டூ இன் ஒன். இன்றைக்குப் பல கோடிகளில் கொழிக்கும் பிசிசிஐ ஒரு காலத்தில் உலகக் கோப்பை வென்ற வீரர்களுக்குப் பரிசு கொடுக்கக் கூட பணம் இல்லாமல் இருந்திருக்கிறது.

சர்வதேச டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலம் 125 கோடி ரூபாய் பரிசு இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது. அதை ஒவ்வொரு வீரருக்கும் பங்கிட்டுக் கொடுக்க உள்ளது. ஆனால் 1983 இல், கபில் தேவ் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றபோது பிசிசிஐ தன்னுடைய வீரர்களுக்கு வெகுமதி அளிக்கக்கூட நிதியில்லாமல் தவித்ததாகச் சொல்லப்படுகிறது. நிச்சயமாக 83இல் இருந்த நிலைமையில் இன்று பிசிசிஐ இல்லை. பணம் காய்க்கும் மரமாக அது மாறி இருக்கிறது.
அப்படிப் பணம் கொழிக்கும் துறையாக உள்ள இந்த இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக பணக்காரர் யார்? சச்சின் டெண்டுல்கர் முதல் கவுதம் கம்பீர் வரையான டாப் 10 பட்டியலை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த வீரர்கள் விளையாட்டு மூலமாக மட்டும் இல்லை, வேறு பல தொழில்கள் மூலமாகவும் இந்தப் பணத்தைச் சம்பாதித்துக் குவித்துள்ளனர். ஒடிஐ உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகள் உலகளவில் பில்லியன் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து ஈர்த்து வருகின்றன. இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தாறுமாறாக நடைபெறுகிறது. அங்கே பணத்திற்குப் பஞ்சமே இல்லை. அந்தளவுக்கு ரசிகர் அதைக் காணக் குவிகின்றனர். அதன் மூலம் ஸ்பான்சர்ஷிப்கள் பல கோடிகள் வந்து கொட்டுகிறது. இந்த விளையாட்டின்போது ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் பல ஆயிரம் கோடி கல்லா கட்டப்படுகின்றன.
ஒரு பக்கம் ரசிகர்களின் அலைமோதல், மற்றொரு பக்கம் ஸ்பான்சர்ஷிப்கள் மூலம் கிடைக்கும் வருமானம் என்று இந்திய வீரர்கள் பணமழையில் குளித்து வருகிறார்கள். அதனால், பன்னாட்டு கார், வாட்ச், பங்களா என்று ஒவ்வொரு வீரரும் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாகச் சொன்னால் ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) என்பது உலகின் இரண்டாவது பணக்கார விளையாட்டு லீக்காக உள்ளது. கிரிக்கெட் மீதான இந்தியர்களுக்கு இருக்கும் மோகத்திற்குச் சரியான சான்று இது. எனவே இந்திய வீரர்களின் ஒவ்வொரு அசைவும் அவர்களது ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் டாப் 10 பணக்கார வீரர்கள் யார்? என்பதைப் பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சச்சின் டெண்டுல்கர் | 150 மில்லியன் டாலர்: பலரால் சிறந்த கிரிக்கெட் வீரர் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுத்து சாதனைப் படைத்தவர். சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்ததே இவரது ஈடு இணையற்ற சாதனை. 150 மில்லியன் டாலர் நிகர மதிப்புடன், இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரராகப் பட்டியலில் டெண்டுல்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி | 110 மில்லியன் டாலர்: எம்.எஸ்.டி என அன்புடன் அவரது ரசிகர்களால் அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவர்தான் தல. இந்தியாவில் உள்ள தலைசிறந்த கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவர். இவர் ஐசிசியின் அனைத்து முக்கிய போட்டிகளிலும் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர். பந்தா இல்லாத மிக எளிமையான வீரர். விக்கெட் கீப்பிங் திறமைக்காகவும் இவர் மதிக்கப்படுபவர். தோனியின் நிகர மதிப்பு 110 மில்லியன் டாலர். இந்தப் பட்டியலில் இவருக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

விராட் கோலி | 93 மில்லியன் டாலர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன். ஆக்ரோஷமான ஸ்டைல், ஈடிணையற்ற உடற்தகுதிக்குப் பெயர் எடுத்தவர். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக மைல்கற்களை தொட்டுப் பல சாதனைகளைச் செய்தவர். சுமார் 93 மில்லியன் டாலர் நிகர மதிப்புடன், உலகளவில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 178 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
சவுரவ் கங்குலி | 50 மில்லியன் டாலர்: தாதா என அடைமொழி போட்டு அழைக்கப்படும் சௌரவ் கங்குலி ஒரு முன்னாள் கேப்டன். அவரது கேப்டன்ஷிப், பேட்டிங் திறமை இவருக்குப் பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. கங்குலியின் நிகர மதிப்பு 50 மில்லியன் டாலர்.
வீரேந்திர சேவாக் | 45 மில்லியன் டாலர்: வீரேந்திர சேவாக் அல்லது விரு. இவர் ஒரு தொடக்க பேட்ஸ்மேன். ஆக்ரோஷமான பேட்டிங் பாணிக்குப் பெயர் பெற்றவர். பல சாதனைகளைப் படைத்துள்ளார். வர்ணனையாளராக வழிகாட்டியாக கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறார். சேவாக்கின் நிகர மதிப்பு 45 மில்லியன் டாலர்கள். இவர் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார்.
யுவராஜ் சிங் | 35 மில்லியன் டாலர்: யுவி என்றால் அது யுவராஜ் சிங்கையே குறிக்கும். 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஆல்ரவுண்டர். சக்திவாய்ந்த பேட்டிங், பீல்டிங் திறமையால் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர். யுவராஜின் சொத்து மதிப்பு 35 மில்லியன் டாலர்.
சுரேஷ் ரெய்னா | 25 மில்லியன் டாலர்: ரெய்னா ஒரு இடது கை பேட்ஸ்மேன். 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை உட்பட பல்வேறு போட்டிகளில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர். இவரது ஆக்ரோஷமான பேட்டிங் பாணி பலரையும் கவர்ந்தது. இவரின் நிகர சொத்து மதிப்பு 25 மில்லியன் டாலர்.
ராகுல் டிராவிட் | 23 மில்லியன் டாலர்: ராகுல் "The Great Wall of India" என பட்டப்பெயர் பெற்றார். அவரது நிகர மதிப்பு 23 மில்லியன் டாலர். கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
ரோஹித் சர்மா | 22 மில்லியன் டாலர்: இந்திய அணியின் இன்றைய கேப்டன் ரோஹித் சர்மா.ஆக்ரோஷமான பேட்டிங், அதிக ரன்களை குவிக்கும் திறமைக்காகப் புகழப்படுபவர். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் உட்படப் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். ஷர்மாவின் நிகர சொத்து மதிப்பு 24 மில்லியன் டாலர்.
கௌதம் கம்பீர் | 19 மில்லியன் டாலர்: 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிகளில் கௌதம் கம்பீர் முக்கிய பங்கு வகித்தார். இவர் பேட்டிங்கின்போது கடைப்பிடிக்கும் under pressure நுட்பத்திற்காகத் தனித்த அடையாளத்தைப் பெற்றவர். 23 மில்லியன் டாலர் இவரது நிகர சொத்து மதிப்பு. ஆக, இவர் பத்தாவது பணக்கார கிரிக்கெட் வீரர் என்ற இடத்தைப் பெற்றுள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications