2018ல் இந்தியாவின் டாப் வைரல் யூ டியூப் வீடியோ எது தெரியுமா.. கலக்கிய முக்கிய புள்ளி!
2018ம் வருடத்தில் இந்தியாவில் வைரலான வீடியோக்களின் டாப் 10 பட்டியலை யூ டியூப் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: 2018ம் வருடத்தில் இந்தியாவில் வைரலான வீடியோக்களின் டாப் 10 பட்டியலை யூ டியூப் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் எத்தனை நாட்கள் இந்த வீடியோக்கள் வைரலாக இருந்தது, எத்தனை நாள் டிரெண்டிங்கில் இருந்தது என்பதை வைத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 வீடியோக்கள் இந்தி வீடியோக்கள் ஆகும்.
இரண்டு வீடியோக்கள் மட்டுமே தமிழ் வீடியோக்கள் ஆகும். வேறு தென்னிந்திய மொழி வீடியோக்கள் இதில் இடம்பிடிக்கவில்லை.

ரஜினி வீடியோ
இந்த லிஸ்டில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு இடங்களை ரஜினியின் படம் பிடித்து உள்ளது. வேறு யாரும் இதில் இரண்டு இடங்களை பெறவில்லை. இந்த லிஸ்டில் 4வது இடத்தில் ரஜினியின் 2.0 படத்தில் டீசர் உள்ளது. 10வது இடத்தில் காலா படத்தின் தமிழ் டீசர் உள்ளது. இந்த லிஸ்டில் உள்ள தமிழ் வீடியோக்கள் இந்த இரண்டு வீடியோக்கள் மட்டுமே ஆகும்.

இரண்டாவது இடத்தில் எது
இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் தாரு பட்னம் என்ற இந்தி பாடலுக்கு டான்ஸ் குழு ஒன்று ஆடும் வீடியோ தேர்வாகி உள்ளது. ''டான்ஸ்பிட் லைவ்'' என்ற சேனல் இந்த வீடியோவை ஏற்றியுள்ளது. மூன்றாவது இடத்தில் சஞ்சய் தத் வாழ்க்கையை வைத்து உருவான சஞ்சு படத்தின் டீசர் தேர்வாகி உள்ளது.
முதல் இடம்
இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வைரலான வீடியோ என, இந்தி வீடியோ ஒன்று முதல் இடத்திற்கு தேர்வாகி உள்ளது. டெரி ஆக்யா கா என்ற பாடலுக்கு இளைஞர்கள் ஆடும் வீடியோ ஆகும் இது. அதே டான்ஸ்பிட் லைவ் சேனல் இந்த வீடியோவை ஏற்றியுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 110,769,241 பேர் பார்த்து இருக்கிறார்கள்.

முழு பட்டியல்
இந்த பட்டியலின்படி (வரிசையாக) டெரி ஆக்யா கா, தாரு பட்னம், சஞ்சு டீசர், 2.0 டீசர், ஸீரோ டீசர், பெஹன் பாய் கீ ஸ்கூல் லைப் வீடியோ, ஸும்பா ஆன் பாம் வீடியோ, தாஸ்தான் இ வீடியோ, காலா டீசர், கிரைம் சிட்டி வீடியோ ஆகியவை டிரெண்டில் இடம்பிடித்துள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications