ஸ்டாலின், உதயநிதியை முந்திய எடப்பாடி.. 2021 தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற டாப் 5 பேர்
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வென்ற 'டாப்' 5 வேட்பாளர்களின் லிஸ்ட்டை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்களின் பெயர் - தொகுதி விவரங்களை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
அமைச்சர் ஐ பெரியசாமி
2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் அமைச்சராக இருக்கும் ஐ பெரியசாமி தான் வெற்றி பெற்றார். இவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். ஐ பெரியசாமி மொத்தம் 1,65,809 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இது 72.60 சதவீதமாகும். இவரை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் திலகபாமா வெறும் 30,238 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் ஐ பெரியாசாமி 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எடப்பாடி பழனிச்சாமி
இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் 1,63,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது 66.27 சதவீத வாக்குகளாகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 69,352 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி மொத்தம் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பூந்தமல்லி திமுக வேட்பாளர்
இதில் 3வது இடத்தில் திமுக எம்எல்ஏ அ.கிருஷ்ணசாமி இருக்கிறார். இவர் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கினார். மொத்தம் 1,49,578 ஓட்டுகள் பெற்றார். இது 57.34 சதவீதமாகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் ராஜமன்னார் 55,468 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இதனால் அகிருஷ்ணசாமி 94,110 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஸ்டாலின்
அதேபோல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 1,05,522 வாக்குகள் பெற்றார். இது 60.86 சதவீதமாகும். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஆதி ராஜாராம் 35,138 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் ஸ்டாலின் 70,384 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்று இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
மேலும் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் களமிறங்கி வாகை சூடினார். இந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் மொத்தம் 93,285 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் கசாலி 23,930 ஓட்டுகள் வாங்கினார். இதனால் உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் உள்ளார்.
-
20க்கும் அதிக வேட்பாளர்களின் வெற்றியை பறித்த நோட்டா.. 2021 தமிழக சட்டசபையில் என்ன நடந்தது? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications