தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,152 பேராக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 31-ஆம் தேதி முதல் தமிழகத்தில் தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட இன்றைய நிலவரங்களில் தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,152 பேராக உள்ளது.

தமிழகம்
மருத்துவமனைகளில் 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,423 ஆகும். மற்ற நாடுகள், மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்களில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில்
விமானம் மூலம் சவுதி அரேபியாவிலிருந்து வந்த 5 பேருக்கும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கும் கர்நாடகாவிலிருந்து வந்த 3 பேருக்கும் டெல்லியிலிருந்து வந்த ஒருவருக்கும் அந்தமான் நிகோபாரிலிருந்து வந்த ஒருவருக்கும் மகாராஷ்டிராவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பரவியது. அது போல் சாலை மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் மகாராஷ்டிரத்திலிருந்து வந்த 12 பேருக்கும் கேரளாவிலிருந்து வந்த 3 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த ஒருவருக்கும், பீகாரிலிருந்து வந்த ஒருவருக்கும், புதுவையிலிருந்து வந்த ஒருவருக்கும் ஆந்திராவிலிருந்து வந்த இருவருக்கும் டெல்லியிலிருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா சோதனை
இன்று மட்டும் 16,022 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதுவரை 5,76,695 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20,993 பேர் ஆகும். இன்று தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களில் ஆண்கள் 874 பேரும், பெண்கள் 584 பேரும் அடங்குவர்.

கொரோனா பலி
இன்று மட்டும் 633 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 16,395 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆகும். செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,719 ஆகும். திருவள்ளூரில் 1,274 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications