Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் எந்த நோயாலும் பாதிக்கப்படாத 10 பேர் உள்பட 85 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3494 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மட்டுமல்ல உயிரிழப்பும் வேகமாக உயர்ந்து வருகிறது. அதிலும் எந்த நோய் தொற்றாலும் பாதிக்கப்படாதவர்கள் கொரோனாவின் தீவிரத்தால் மரணத்தை சந்திப்பது அதிகரித்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதில் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தவர்கள் ஆவர்.

கொரோனா பலி

கொரோனா பலி

திருவள்ளூரைச் சேர்ந்த 43 வயது நபர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 43 வயது நபர், திருவண்ணாமலையைச் சேர்ந்த 37 வயது நபர், மதுரையைச் சேர்ந்த 64வயது ஆண், திருநெல்வேலியில் 55 வயது நபர், தஞ்சாவூரில் 15 வயது சிறுமி உள்பட 10 பேர் எந்த நோயாலும் பாதிக்கப்படாத நிலையில் கொரோனாவின் தீவிரத்தால் மூச்சுதிணறல் ஏற்பட்டு பலியாகி உள்ளனர்.

மாவட்ட வாரியாக

மாவட்ட வாரியாக

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 26 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மதுரையில் 8 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், திருவள்ளூரில் 5 பேரும் விருதுநகரில் 5 பேரும், திருநெல்வேலியில் 4 பேரும் வேலூரில் 4 பேரும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் 3 பேரும், கன்னியாகுமரியில் 3 பேரும், திருவண்ணாமலையில் 3 பேரும் இன்று கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

கோவையில் ஒருவர்

கோவையில் ஒருவர்

தேனி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கோவை, தர்மபுரி, நாகப்பட்டினம், நாமக்கல், திருப்பத்தூர், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடியில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தனர்.

மதுரையில் 210

மதுரையில் 210

தமிழகத்தில் அதிகபட்சமாக இதுவரை 2011 பேர் சென்னையில் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 227 பேருக்கும், மதுரையில் 210 பேருக்கும், திருச்சியில் 58 பேருக்கும், விருதுநகரில் 57 பேரும், தேனியில் 48 பேரும், வேலூரில் 43 பேரும் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+