திடீரென உயரும் கொரோனா கேஸ்கள்.. இன்று 514 பேருக்கு பாதிப்பு.. சென்னையில் ஒருவர் பரிதாபமாக பலி! பகீர்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சில மாதங்களாகக் குறைந்து நிலையில், இப்போது திடீரென மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்பட்ட பிறகு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்தே வந்தது. இதனால் மாநிலத்தில் அப்போது அமலில் இருந்து பல கட்டுப்பாடுகள் வரிசையாக நீக்கப்பட்டன.
கொரோனா வேக்சின் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் பல நாட்களுக்கு மாநிலத்தில் தினசரி பாதிப்பு 50க்கும் குறைவாகவே இருந்தது.

கொரோனா பாதிப்பு: இதனிடையே கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதிய வகை ஓமிக்ரான் திரிபு காரணமாகவே இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், முந்தைய வகைகளைக் காட்டிலும் இப்போது பரவும் ஓமிக்ரான் பாதிப்பு வீரியம் குறைந்ததாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
மாநிலத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டிய நிலையில், இப்போது அதைக் காட்டிலும் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5866 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இருவர் உட்பட 514 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 36,02,215ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னை: அதிகபட்சமாகச் சென்னையில் 138 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு எந்தவொரு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. கோவையில் 55 பேருக்கும் திருவள்ளூரில் 27 பேருக்கும் செங்கல்பட்டில் 26 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இப்போது சராசரி கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 8.4ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 11.8%ஆக உள்ளது. இது தவிர திருவள்ளூர் (11%), செங்கல்பட்டு (10.9) சென்னை (10.4) கோவை (10.8) சேலம் (10.5) பாசிட்டிவ் விகிதம் 10ஐ தாண்டியுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்: மேலும், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 3048ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 3195ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 881 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோல ஒரே நாளில் 366 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,60,964ஆக உயர்ந்துள்ளது.
சில காலமாக கொரோனா உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில், கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. நேற்று திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் 38,056 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications