"நீதிபதியை விமர்சிக்கிறார்".. கொதித்த நாராயண் திருப்பதி! "முடிஞ்சா தொடு"! செந்தில்குமார் எம்பி சவால்
சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் விமர்சனம் செய்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் நாராயண் திருப்பதி விமர்சனம் வைத்துள்ளார்.
இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்த திமுக, ரிட் மனு மூலம் தங்களையும் மனு தாரராக சேர்த்துக்கொண்டது.
இந்த வழக்கில் இன்று திமுக வழக்கறிஞர் எம்பி வில்சன் வாதிடும் போது தலைமை நீதிபதி ரமணா குறுக்கிட்டு முக்கிய கருத்து தெரிவித்தார். அதில், உங்கள் கட்சியை பற்றி நான் நிறைய சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைக்கவேண்டாம்.
நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள், என்று குறிப்பிட்டார்.

விமர்சனம்
திமுகவினர் பலரும் நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு பதில் அளித்து வருகிறார்கள். திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், ஆம். #சமூக_நீதி ஆட்சி மூலம் இதை சாதித்து,தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன doubt. My UnLords, என்று விமர்சனம் வைத்துள்ளார். லார்ட் என்று குறிப்பிடாமல் அதற்கு எதிர் பதத்தில் அன் லார்ட்ஸ் என்று குறிப்பிட்டு திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் விமர்சனம் வைத்துள்ளார்.

திமுக எம்பி
நீதிபதியின் கருத்தை விமர்சனம் செய்த திமுக எம்பி செந்தில் குமார்.. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் முற்பட்ட வகுப்பை சேர்ந்த பிரிவினர்தான். அப்படி செய்தவரை இது போன்ற கமெண்ட்கள்தான் வரும். சமூக நீதிக்கும், மக்கள் நல்திட்டங்களுக்கும் எதிரான கருத்துக்கள்தான் வரும். இந்தியாவின் முதல் எஸ்.சி, ஓ.பி.சி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வந்தார்கள். அதற்கு கருணாநிதிதான் காரணம் என்று செந்தில் குமார் எம்பி குறிப்பிட்டார்.

நாராயண் திருப்பதி
இதற்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவர் நாராயண் திருப்பதி, நீதிபதிகள் பற்றி கமெண்ட் செய்வது என்று மிகப்பெரிய குற்றம். இந்த பாராளுமன்ற உறுப்பினர் தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் பற்றி ஜாதி ரீதியாக அவர் கருத்து சொல்லி இருக்கிறார். அவரின் இகழ்ச்சியான கருத்துக்களுக்கு அவர் தண்டிக்கப்பட வேண்டும், என்று பாஜகவின் நாராயணன் விமர்சனம் வைத்து இருந்தார்.

மோதல்
இந்த நிலையில் தற்போது எம்பி செந்தில் குமார் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், போங்க.. Bring it on. .. முடிஞ்சா தொட்டு பார்(ங்க) என்று சவால் விட்டுள்ளார். அதாவது வழக்கு தொடுக்க விருப்பம் இருந்தாலோ, புகார் கொடுக்க விருப்பம் இருந்தாலோ முடிந்தால் செய்து பாருங்கள் என்று பாஜகவின் நாராயணனுக்கு திமுக எம்பி செந்தில் குமார் சவால் விட்டுள்ளார். திமுக எம்பி செந்தில் குமாரின் இந்த ட்விட் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காரணமாக பாஜக, திமுகவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications