பரபரக்கும் தமிழக பாஜக தலைவர் ரேஸ்... லிஸ்டிலேயே இல்லாத இவரும் தீவிர முயற்சி..!
சென்னை: மத்திய இணை அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றதை தொடர்ந்து விரைவில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பாஜக கொள்கையின் படி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் இந்த மாற்றம் நிகழவுள்ளது.

அந்த வகையில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் தான் நேற்று முதல் அரசியல் கட்சியினரிடையேயும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் நடைபெற்று வருகிறது.
அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள சூழலில், தலைவர் பதவிக்கான லிஸ்டிலேயே இல்லாத டாக்டர் சரவணனும் அந்த பதவிக்காக தீவிர முயற்சி செய்து வருகிறார்.
டெல்லி தலைமைக்கு நெருக்கமான ஆன்மிகத் தலைவர் ஒருவர் மூலம் தூது அனுப்பும் படலத்தை தொடங்கியுள்ள டாக்டர் சரவணன், தனது ஒட்டுமொத்த ஜாதகத்தையும் பாஜக தலைமைக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் சாதிரீதியாக தனக்கிருக்கும் பலம், பொருளாதார நிலை, அரசியல் செயல்பாடு, என அனைத்து விவரங்களையும் தலைமையின் மனதில் பதிய வைப்பதற்கான பணிகளை செய்து வருகிறாராம்.
இதனிடையே நயினார் நாகேந்திரன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாலும், எம்.எல்.ஏ.வாக இருப்பதாலும் தமிழக பாஜக தலைவர் பதவிக்காக ரேஸில் தற்போதைய நிலவரப்படி அண்ணாமலை தான் முந்துகிறார். இறுதியில் இதில் எதுவும் நிகழலாம்.
ஏனெனில் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டிருந்த நயினார் நாகேந்திரன், அரசியலில் தனது சீனியாரிட்டி குறித்து தலைமைக்கு மிக தீர்க்கமாக எடுத்துக்கூறிவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார். இதனிடையே எல்.முருகனையே தலைவர் பதவியில் தொடர வைக்கலாமா என்பது குறித்தும் டெல்லி பரிசீலித்து வருகிறது.
-
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications