• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அமைச்சர்களை அதிர வைக்கும் '1%' .. திண்டுக்கல் மக்களின் தீர்ப்பு என்ன? - மாலை முரசு சர்வே

|

சென்னை: மாலைமுரசு இதுவரை வெளியிட்டுள்ள 104 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கள நிலவரம் இழுபறியாக உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவார காலமே மீதமுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்று (மார்ச்.28) மாலை முரசு பல தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் 'நெக் டூ நெக்' போட்டி நிலவும் சூழலில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

 1 சதவிகித வித்தியாசம்

1 சதவிகித வித்தியாசம்

இதில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி 44% பெற்று முதலிடம் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 43% பெற்று இரண்டாமிடம் பெறுகிறது. வெறும் 1 சதவிகித வித்தியாசம் மட்டுமே. நாம் தமிழர் 4% பெற்று மூன்றாம் இடம் பெறுகிறது. அமமுக 3% வாக்குகள் பெறுகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2% வாக்குகள் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இங்கும் அதே ரிசல்ட்

இங்கும் அதே ரிசல்ட்

அதேபோல், வேடசந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி 41% பெற்று முதலிடம் பெறுகிறது. திமுக கூட்டணி 40% பெற்று இரண்டாமிடம் பெறுகிறது. இங்கும் ஒரு சதவிகித வித்தியாசம் மட்டுமே. நாம் தமிழர் 5% பெற்று மூன்றாம் இடம் பெறுகிறது. அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தலா 2% வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விடாமல் துரத்தும் ஒரு பெர்சன்ட்

விடாமல் துரத்தும் ஒரு பெர்சன்ட்

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணி 43% பெற்று முதலிடம் பெறுகிறது. அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் இங்கு அதிமுக சார்பில் களம் காண்கிறார். அதேசமயம், அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாண்டி, 42% வாக்குகள் பெறுகிறார். கடைசி நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம். நாம் தமிழர் மற்றும் அமமுக தலா 5% பெற்று மூன்றாம் இடம் பிடிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் தலா 4% வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடும் இழுபறி

கடும் இழுபறி

நத்தம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே இழுபறி நீடிக்கிறது. இரு கட்சிகளும் தலா 42% வாக்குகள் பெறுகின்றன. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இங்கு போட்டியிடுகிறார். நாம் தமிழர் மற்றும் அமமுக தலா 3% பெற்று மூன்றாம் இடம். மக்கள் நீதி மய்யம் 2% வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

 அதிமுக லீடிங்

அதிமுக லீடிங்

நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக 41% பெற்று முதலிடம் பிடிப்பதாக மாலைமுரசு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 39% வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடிக்கிறது. அமமுக 5% பெற்று மூன்றாம் இடம் பெறுகிறது.

 திமுக டாப்

திமுக டாப்

ஆத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி 51% பெற்று பெரும் லீடிங்கில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு திமுக சார்பில் பெரியசாமி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா களம் காண்கிறார். இவர் 35% வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அமமுக 6% பெற்று மூன்றாம் இடம் பிடிக்கிறது. நாம் தமிழர் கட்சி 5% வாக்குகள் பெறுகிறது. மக்கள் நீதி மய்யம் 2% வாக்குகள் பெறுகிறது

 பெரும் வித்தியாசம்

பெரும் வித்தியாசம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக கூட்டணி 47% பெற்று வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணி 38% பெறுகிறது. அமமுக தலா 6% பெற்று மூன்றாம் இடம். ஒட்டன்சத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 4% வாக்குகள் பெறுகிறது. மக்கள் நீதி மய்யம் 2% வாக்குகள் பெறுகிறது.

 இழுபறி

இழுபறி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணி தலா 42% வாக்குகள் பெறுகின்றன. நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் தலா 4% வாக்குகள் பெறுகின்றன. அமமுக 3% வாக்குகள் பெறுகிறது.

 தொடரும் சிக்கல்

தொடரும் சிக்கல்

திண்டுக்கல் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதியில் அதிமுக கூட்டணி 43% பெற்று முதலிடம் பிடிக்கிறது. அதிமுக சார்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இங்கு திமுக கூட்டணி இராண்டாமிடம் பிடித்தாலும் 42% வாக்குகள் பெறுகிறது. வெறும் ஒரு சதவிகித வித்தியாசம் தான். இதனால், அமைச்சர் தரப்பு அதிருப்தியில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் 5% பெற்று மூன்றாம் இடம். அமமுக, நாம் தமிழர் உடுமலைப்பேட்டை தொகுதியில் தலா 4% வாக்குகள் பெறுகின்றன

 கைப்பற்றும் திமுக

கைப்பற்றும் திமுக

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் 45% பெற்று திமுக முதலிடம் பிடிக்கிறது. 40% பெற்று அதிமுக இரண்டாமிடம். அமமுக 7% பெற்று மூன்றாம் இடம். வால்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி 4% வாக்குகள் பெறுகிறது. மக்கள் நீதி மய்யம் 2% வாக்குகள் பெறுகிறது.

 
 
 
English summary
tough fight between dmk and aiadmk in dindugal - திண்டுக்கல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X