நான் ஜெ., வீட்லயே சாணியை கரைச்சு ஊற்றியவன்.. கொதித்த கு.க.செல்வம்.. பின்வாங்காத குஷ்பூ!
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
தேர்தல் வந்தாலே கூட்டணி மாற்றம், உட்கட்சி பூசல், நட்பு முறிவு, துரோகம் என்று கமர்ஷியல் அம்சங்களை நாம் காண முடியும்.
நேற்று காங்கிரஸ் கட்சியில் அரங்கேறிய கோஷ்டி பூசலை தமிழ்நாடே பார்த்தது. டெல்லி கூட நொந்துகொண்டது. இப்போது பாஜகவும் இப்படியொரு சிக்கலான சூழலை சந்தித்துள்ளது.

நிபந்தனை
எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்து, பின் திமுகவில் ஐக்கியமான கு.க.செல்வம், கருணாநிதிக்கு விசுவாசமாக செயல்பட்டு, பின்னர் பாஜகவில் சங்கமித்தார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் இவர் தான். பாஜகவில் இணையும் போதே, ஆயிரம் விளக்கில் மீண்டும் சீட் வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் இணைந்தார்.

அண்ணன் தான் எம்.எல்.ஏ
அதிமுகவுடனான கூட்டணியை மீண்டும் பாஜக கன்டினியூ செய்ய, கண்டிப்பாக தனக்கு சீட் கிடைக்கும் என்றே அவர் எண்ணினார். அதற்கேற்றாற் போல், ஆயிரம் விளக்கு தொகுதியை அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கியிருந்தது. இதனால், சீட் கன்ஃபார்ம்.. அண்ணன் தான் மீண்டும் எம்.எல்.ஏ. அவரது ஆதரவாளர்கள் வேலை செய்வதில் மும்முரமாகினர்.

நட்சத்திர அந்தஸ்து
இந்நிலையில், காங்கிரஸில் இருந்து பாஜகவில் ஐக்கியமான நடிகை குஷ்பூவும், அதே ஆயிரம் விளக்கு தொகுதியை கேட்பதால், கட்சிக்குள் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. குஷ்பூ நட்சத்திர அந்தஸ்து கொண்ட கேண்டிடேட். கு.க.செல்வமோ சிட்டிங் எம்.எல்.ஏ. தொகுதியில் செல்வாக்கு உடையவர். தவிர, கட்சியில் இணையும் போதே, ஆயிரம் விளக்கு தான் வேண்டும் என்று ஒப்பந்தம் போடாத குறையாக கேட்டிருந்தார்.

ஜெ., வீட்டில்
இப்போது குஷ்புவும் ஆயிரம் விளக்கு தொகுதி வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறாராம். இதனால் டென்ஷனான கு.க.செல்வம் தரப்பு, 'நாம் யார் என்று தெரியாமல் விளையாடுகிறார்களா? போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டிலேயே சாணியைக் கரைத்து ஊற்றியவன் நான்' என்று பொரிந்து தள்ளியதாக கூறப்படுகிறது.

ஜானகி அட்வைஸ்
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜா., அணி, ஜே., அணி என்று கட்சியில் பிளவு ஏற்பட, அப்போது ஜா., அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதியுடன் இணைந்து கு.க.செல்வம் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சாணியைக் கரைத்து ஊற்றும் போராட்டத்தை நடத்தினார். இதன் பிறகு, ஜெயலலிதா கடைசி வரை அவரை கட்சிப் பக்கமே சேர்க்கவில்லை என்பதும், அதன் பிறகு ஜானகி அட்வைஸ் பேரில் அவர் திமுகவில் இணைந்ததும் வரலாறு.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications