அடுத்த வீக் எண்ட் மகாபலிபுரம் போற பிளான் இருக்குதா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்குதான்
சென்னை: அடுத்த வீக் என்ட், மகாபலிபுரம் பக்கம் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், அதை நீங்கள் மறுபரிசீலனை செய்துகொள்ளுங்கள் மக்களே.
வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன. இதன்பிறகு, வீக் என்ட்டான வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, பக்கத்தில் மாமல்லபுரத்திற்கு, ஒரு குட்டி ட்ரிப் அடிக்கலாம் என சென்னை மற்றும் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் ஏதாவது பிளான் வைத்திருப்பீர்கள்.

அப்படி பிளான் இருந்தால், மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜிஜன்பிங் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சி அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வரும் அக்டோபா் 11ம் தேதி முதல் அக்டோபா் 13ம் தேதி வரை இருவரும் தங்கி இரு நாடுகளிடையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனா்.

மூன்று நாட்களுமே, இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என்பதால் இந்த நாட்களில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள்தான் இதன் பின்னணியாம். எனவே, டூர் பிளானை அதற்கடுத்த வீக் என்டுக்கு மாற்றிக்கோங்களேன்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications