இந்த ரூட்ல எல்லாம் போக முடியாது.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளே உஷார்!
சென்னை: சென்னை பெசன்ட் நகர் முதல் கலங்கரை விளக்கம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் இன்று காலை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. எனவே பெசன்ட்நகர், சாஸ்திரிநகர், மந்தைவெளி, அடையாறு, மயிலாப்பூர் திரு.வி.க.பாலம், கலங்கரை விளக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லைட் ஹவுஸ் மற்றும் லைட்ஷிப்களின் இயக்குநரகம் (துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்திய அரசு) சார்பில் மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகர் முதல் கலங்கரைவிளக்கம் வரை சுமார் 7 கி.மீ மாரத்தான் ஓட்டம் தொடங்கியுள்ளது.
இதற்காக பெசன்ட் நகர் ஒல்காட்நினைவு பள்ளியில் தொடங்கி, சாஸ்திரி நகர் மற்றும் கலங்கரை விளக்கம் வரை காலை 4 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சகம் சார்பாக 7 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி சென்னையில் ஜூலை 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் காலை 4 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து மாற்றிவிடப்படுகிறது. அதாவது பெசன்ட் நகர் 2 மற்றும் மூன்றாவது அவென்யூ எம்எல் பூங்கா நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சாஸ்திரி நகர் பெசன்ட் நகர் பணிமனை அருகே திருப்பி விடப்படுகிறது. எம் ஜி சாலை எல்பி சாலை சந்திப்பு வழியாக இலக்கை அடையலாம்.
அடையார் சிக்னல் எம் எல் பூங்கா வரும் பேருந்துகள் எம்எல் பூங்காவில் திருப்பி விடப்படுகிறது. இது சார் எல்பி சாலை சாஸ்திரி நகர் 1வது அவன்யூவில் திருப்பிவிடப்படுகிறது. மேலும் டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலை சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம் வரை வரும் திசையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.
காந்தி சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதேபோல் ஆர்.கே ரோட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் காந்தி சிலையை நோக்கி அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் வி.எம் தெரு வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை லெஸ் சந்திப்பு ஆர்.கே மேடம் சாலை வழியாக செல்லலாம்.
மந்தவெளி சந்திப்பில் இருந்து தெற்கு கால்வாய் கரை சாலைகள் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இங்கு வரும் வாகனங்கள் ஆரியபுரம் இரண்டாவது பிரதான சாலை ஷேர்மியர் சாலை காந்தி மண்டபம் வழியாக திருப்பிவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications