யூ-டர்ன்.. சென்னை மக்களுக்கு முக்கிய அப்டேட்.. இனி இந்த ரூட்ல போக முடியாது! போக்குவரத்து மாற்றம்!
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக தாம்பரம் மேடவாக்கம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இன்று முதல் வாகன ஓட்டிகள் பயணம் செய்வதற்கு வேறு பாதையில் திருப்பி விடப்படுகின்றனர்.
மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக சென்னை மேடவாக்கத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேடவாக்கம் கூட்டுசாலை சந்திப்பு- சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக செம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மாம்பாக்கம் சாலை, வேளச்சேரி பிரதான சாலை வழியாக தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: இதுதொடர்பாக, தாம்பரம் மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மேடவாக்கம் கூட்டு சாலை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூா் சந்திப்பு வரை வேளச்சேரி பிரதான சாலை, செம்மொழி சாலை ஆகியவற்றில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்தப் பகுதியில் சோதனை முறையில் ஜூலை 2 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து செம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி பள்ளிக்கரணை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பில் யூ -டர்ன் அடித்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.

இந்த வழியில் செல்ல தடை: மாம்பாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மாம்பாக்கம் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பு யூ-டர்ன் செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாகச் செல்ல வேண்டும்.
மேலும், மேடவாக்கம் சந்திப்பு பகுதியில் இருந்து மாம்பாக்கம் சாலை, வேளச்சேரி பிரதான சாலை வழியாக தாம்பரம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications