திருப்பதி திருக்குடை ஊர்வலம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் நாளை (செப்டம்பர் 17) திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெதந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: செப்டம்பர் 17 ஆம் தேதியான நாளை திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கீழ்க்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

1. காலை 8 மணி முதல் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈவேரா சாலை இராஜாஜி சாலை வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
2. மலை 03.00 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது இராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈவேரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் இராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.
3. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் இராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
4. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
5. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
6. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.
7. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டண்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம்.
8. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
9. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
10. திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஒட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம். வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications