சென்னையின் முக்கிய சாலையில்.. ஒருவாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகள் நோட் பண்ணிக்கோங்க
சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதன் காரணமாக, சென்னை அடையார் - இந்திரா நகர் பகுதியில் இன்று முதல் ஒருவாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்காக முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., சென்ட்ரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் பணி: இதையடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3 வது வழித்தடத்தில் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4 வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5 வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பணிகள் நடக்கிறது. ரூ.63,246 கோடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்: இந்த நிலையில், சென்னை அடையார் - இந்திரா நகர் பகுதியில் இன்று முதல் ஒருவாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறியதாவது:- சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளது. இப்பணிகளை கருத்தில் கொண்டு இந்திரா நகரில் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
எம்.ஜி.சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாக ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு 2-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, 21-வது குறுக்கு தெரு, இந்திரா நகர் 3-வது அவென்யூ வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். அதேபோல, கலாஷேத்ராவில் இருந்து ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும்.
ஓ.எம்.ஆரில் இருந்து: கே.பி.எனில் இருந்து ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். ஓ.எம்.ஆரில் இருந்து 2-வது அவென்யூ வழியாக எல்.பி.சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 2-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் முதலாவது பிரதான சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கலாஷேத்ராவில் இருந்து இந்திரா நகர் 3-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலை நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஓ.எம்.ஆர். மற்றும் கலாஷேத்ராவில் இருந்து கே.பி.என்.சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications