சென்னையில் நாளை முதல் இந்த ரூட்ல போய்டாதீங்க.. மேஜர் போக்குவரத்து மாற்றம்.. வெளியான அறிவிப்பு!
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக நாளை முதல் சில நாட்களுக்கு பழைய வண்ணாரப்பேட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் (TH Road) மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், பழைய வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நாளை ஜூலை 7 முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரி முதல் டி.எச்.சாலை, கல்லறை சாலை சந்திப்பு வரை மழை நீர் வடிக்கால்களை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால், மேற்படி சாலையில் 07.07.2025 அன்று (நாளை) முதல் போக்குவரத்து மாற்றமானது செயல்படுத்தப்பட உள்ளது.
மின்ட் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் டி.எச். சாலை, கல்லறை சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு கல்லறை சாலை, எம்.எஸ் கோயில் தெரு, எஸ்.என். சாலை மற்றும் ஜீவரத்தினம் சாலை வழியாக டி.எச்.சாலை அப்போலோ மருத்துவமனை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மின்ட் பகுதியில் இருந்து வரும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் டி.எச். சாலையை நோக்கி சென்று டி.எச். சாலை அப்போலோவை அடையலாம்.
டி.எச்.சாலை அப்போலோ மருத்துவனை சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் டி.எச். சாலை நோக்கிச் சென்று வழக்கமான பாதையில் சென்று மின்ட் சந்திப்பை அடையலாம். அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் தற்காலிக மாற்றங்களை பின்பற்றி, சரியான நேரத்தில் வடிகால் கட்டுமானப் பணியை முடிக்க உதவுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. திட்டமிட்டு பயணிக்கவும், போக்குவரத்து காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாலைப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டியே, மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications