சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்.. ரிசல்ட்டை வலுவாக காட்டிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தி இருந்தது. ரேடியல் சாலையை இணைக்கும் பகுதியில் கொண்டு இந்த போக்குவரத்து மாற்றத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்க வேண்டிய பல வாகன ஓட்டிகள் ரூல்ஸை மீறி ஒருவழிப்பாதையில் வந்ததால், அதன் ரிசல்ட் வலுவாக வந்துள்ளது. இன்று காலையிலேயே கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பெருங்குடி சுங்கச்சாவடி தொடங்கி ரேடியல் சாலை சந்திப்பு வரை கடுமையான நெரிசல் இருப்பதை காண முடிந்தது.

சென்னை ராஜீவ் காந்தி சாலையில் தான், அதாவது பழைய மகாபலிபுரம் சாலையான ஓஎம்ஆர் சாலையில் தான் ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் உள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் காலை மற்றும் மாலையில் ஒரே நேரத்தில் வந்து செல்கிறார்கள். மற்ற நேரங்களிலும் கணிசமான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. மிகவும் அதிகப்படியான கார்கள் மற்றும் வாகனங்கள் ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் இருந்து வருவதால், ஓஎம்ஆர் சாலையில் எப்போதுமே வாகன நெரிசல் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக ரேடியல் சாலை சந்திப்பு பகுதியில் அதிகமாகவே இருக்கும். இந்த நெரிசலை சற்று குறைக்கும் முயற்சியாகவே சென்னை போக்குவரத்து காவல் துறை அண்மையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

Traffic diversion on Chennai OMR A harsh lesson learned on the road due to rule violation

அந்த அறிவிப்பில், சென்னை ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) துரைப்பாக்கம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தவும் 23.09.2026 முதல் (அதாவது இன்று முதல்) கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேட்டுக்குப்பம் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் கீதம் உணவகம் அருகேயூ டர்ன் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று, அங்குயூ டர்ன் செய்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்ல வேண்டும்.

அதே போல், 200 அடி ரேடியல் சாலையிலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் ஸ்ரீவரம் அருகேயூ டர்ன் செய்ய அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி சென்றுயூ டர்ன் செய்து சோழிங்கநல்லூர் செல்ல வேண்டும்.

கந்தன்சாவடியிலிருந்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் நோக்கிச் செல்லும் வாகனங்கள், உலக வர்த்தக மையம் (World Trade Centre) அருகேயூ டர்ன் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்றுயூ டர்ன் செய்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் (SRP Tools) நோக்கிச் செல்ல வேண்டும். பெருங்குடி மற்றும் ஸ்ரீவரம் பகுதியிலிருந்து 200 அடி ரேடியல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் கீதம் உணவகம் அருகேயூ டர்ன் செய்து 200 அடி ரேடியல் சாலைக்கு செல்ல வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் நடைமுறையில் வாகன ஓட்டிகள் அப்படி சுற்றி செல்ல விரும்பவில்லை. ஒருவழிப்பாதையில் சுற்றிச்செல்ல முயற்சி செய்தார்கள்.. அப்படித்தான் பலர் சென்றார்கள். இதன் காரணமாக சாலையின் ஒரு புறம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெருங்குடி சுங்கச்சாவடி தொடங்கி ரேடியல் சாலை சந்திப்பு தாண்டி, சோழிங்கநல்லூர் வரை ஸ்தம்பிக்கும் வகையில் மாறியது. இதுபற்றி வாகன ஓட்டிகளிடம் கேட்ட போது , அவர்களின் பதில் வேறாக இருந்தது. இது டிராபிக் ரூல்ஸை பின்பற்றாதது தொடர்பான பிரச்சனை கிடையாது, பிஸ்ஆர் மால் எதிரே உள்ள 'U-turn' மூடப்பட்டதால், சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 'Chennai One'-லிருந்து சோழிங்கநல்லூரை அடைய 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகிவிட்டதாக புலம்புகிறார்கள்.

இன்னொரு வாகன ஓட்டி கூறுகையில், துரைப்பாக்கத்தில் போக்குவரத்து போலீசார் செய்துள்ள 'U-Turn' மாற்றங்களால் இதுதான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்.
வாகன ஓட்டிகள் எதிர் திசையில் உள்ள சர்வீஸ் சாலைகளைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்; இதனால் அந்தத் திசையிலிருந்து வரும் வாகனங்களுக்கு மற்றொரு போக்குவரத்து நெரிசல் பாயிண்ட் உருவாகும்.

இப்போதெல்லாம் பேருந்துகளும் கூட OMR சர்வீஸ் சாலைகளையே பயன்படுத்துகின்றன. இந்த மாற்றம் போக்குவரத்து ஓட்டத்தை முற்றிலும் சீர்குலைத்துவிட்டது என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. விரைவில் வேறு ஏதாவது மாற்றுத்திட்டத்தை முன் வைக்க வேண்டும். அல்லது பழையபடி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+