Chennai traffic: இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்து தர்மார்த்த ஸ்மிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் போலீசார் அறிவித்துள்ள போக்குவரத்து மாற்றங்கள் விவரம் வருமாறு:
* திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா.சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.
* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும் போது மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications