சென்னை போரூர்- கோடம்பாக்கம் வரை இரு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் இதோ!
சென்னை: மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகள் காரணமாக சென்னை- போரூர் முதல் கோடம்பாக்கம் வரை போக்குவரத்துகள் இரு நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகள் காரணமாக ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பில் இருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்டபணி துவங்க உள்ளதால் இன்று 08-08-2021 மற்றும் 09-08-2021 ஆகிய இரண்டு நாட்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

கோடம்பாக்கம் மேம்பாலம்
அதன்படி போரூர் மார்க்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். இந்த வாகனங்களுக்கு எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்பட உள்ளது.

மார்க்கத்தில் இருந்து சாலிகிராமம்
கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்தில் இருந்து சாலிகிராமம், போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவென்யூ சாலை, பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, 80அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

வடபழனி சந்திப்பு
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வடபழனி சந்திப்பிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவென்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை வழியாக வடபழனி சந்திப்பை அடையலாம்.

கே கே நகர்
போரூர் மார்க்கத்தில் இருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 80 அடி சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக ஆற்காடு சாலையில் நேராக சென்று வடபழனி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பி.டி.ராஜன் சாலை வழியாக கே.கே.நகர் செல்லலாம்.

அசோக் பில்லர் மார்க்கம்
அசோக் பில்லர் மார்க்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக்நகர் காவல் நிலையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அசோக் நகர் 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லலாம்.

துரைசாமி சாலை
வடபழனி சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் துரைசாமி சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக ஆற்காடு சாலையில் நேராக சென்று பவர்ஹவுஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டும். அதேபோல் கே.கே.நகரில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜமன்னார் சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக இடதுபுறம் திரும்பி 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று அடையலாம்.

வன்னியர் தெரு
வன்னியர் தெருவில் இருந்து ராஜமன்னார் சாலையில் வரும் வாகனங்கள் நேரே செல்ல அனுமதி இல்லை. மாறாக 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வடபழனி மேம்பாலம் சர்விஸ் சாலையில் வரும் வாகனங்கள் வடபழனி சந்திப்பில் நேராக செல்ல அனுமதி இல்லை. இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை சென்று பவர்ஹவுஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக அசோக் பில்லர் நோக்கி நேராக செல்லலாம். இவ்வாறு காவல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications