Vidaamuyarchi: விடாமுயற்சி பார்க்க போன அஜித் ரசிகர்களுக்கு போலீஸ் ஷாக்
சென்னை: சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 'விடாமுயற்சி' (Vidaamuyarchi)திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு போக்குவரத்து போலீசார் ஷாக் கொடுத்துள்ளனர். வெற்றி தியேட்டர் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் சுமார் 2 ஆண்டுகளாக அஜித்துக்கு படங்கள் ஏதும் வெளியாகாததால், அவரது ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது அஜித்தின் 'விடாமுயற்சி'. இரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்தாலும், இன்று விடாமுயற்சி திரைப்பட ரிலீஸை நடிகர் அஜித்தின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு முதலே தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விடாமுயற்சி ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விடாமுயற்சி' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டுக்கு அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களுக்கு விடாமுயற்சி படத்தைக் காண சென்றுள்ளனர்
தமிழ்நாட்டில் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் காட்சியின் முதல் பாதி தற்போது நிறைவடைந்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள், ரசிகர்கள் பலர் விடாமுயற்சி திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் விடாமுயற்சி படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு அஜித்தின் விடாமுயற்சி படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர், தியேட்டருக்கு முன்பாகவே தங்களது பைக்குகளை பார்க் செய்துள்ளனர்.

இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வெற்றி திரையரங்ம் முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த அத்தனை பைக்குகளுக்கும், தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் செல்ல பாண்டியன் தலைமையிலான போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து, ரூ. 1000 அபராத சலானை வாகனங்களில் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் குறித்த மெசேஜ் சென்றடைந்ததால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications