மீண்டும் சிக்கலில் டிடிஎஃப் வாசன்.. பிரதமர் அலுவலகத்துக்கே பறந்த புகார்.. கடைக்கு போலீசார் நோட்டீஸ்!
சென்னை: சென்னை அயப்பாக்கத்தில் உள்ள பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகன ரேசிங் உபகரணங்கள் விற்பனை கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். அதிவேகமாக பைக் ஓட்டி சாகசங்கள் செய்து அது தொடர்பான பைக் ஸ்டண்ட் வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இதனால் டிடிஎஃப் வாசனுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பாலோயர்களாக இருந்து வருகின்றனர்.

டிடிஎஃப் வாசன் சென்னை அயப்பாக்கத்தில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் - ரேஸிங் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை தனது கடையில் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார், டிடிஃப் வாசனின் கடைக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.
டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன உதிரிபாக கடையில் அதிகம் சத்தம் எழுப்பக் கூடிய சைலென்சர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், வாகனங்கள் அதிக அளவில் அங்கு வருவதால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார் வந்த நிலையில், டிடிஎஃப் வாசனின் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர். மேலும், கடை முன்பாக சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே ஆபத்தான முறையில் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கினார் டிடிஎஃப் வாசன். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மூலம் மீட்கப்பட்ட டிடிஎஃப் வாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவர் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து வெளியில் வர ஜாமீன் விண்ணப்பித்த அவருக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாகப் பேசி, ஜாமீனை நிராகரித்தார். பின் 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகம்.
இந்நிலையில் பல்வேறு மேல்முறையீடுகளுக்குப் பிறகு டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. லைசென்ஸ் கேன்சல் ஆனால் என்ன? இருசக்கர வாகனம் ஓட்ட மட்டும் தானே கூடாது ரேஸ் டிராக்கில் ஓட்ட முடியும். இதற்காக இண்டர்நேஷனல் லைசென்ஸை விரைவில் எடுப்பேன் என்று வாகனங்களில் அமர்ந்து வீடியோவை வெளியிட்டார் வாசன்.
இதையடுத்து தற்போது சென்னை அயப்பாக்கத்தில் பகுதியில் டிடிஎஃப் பிட் ஷாப் என்ற பெயரில் இவர் டூவீலர் சம்பந்தப்பட்ட உபகரணங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அந்த கடையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தான் கடையில் ஆய்வு செய்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திற்குச் சென்ற புகாரை தொடர்ந்து, டிடிஎஃப் வாசனின் கடைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளது அவரது ஃபாலோயர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications