பொக்கே + பொக்கை வாயுடன் ஸ்டாலினை மு.க.வாழ்த்திய டிராபிக் ராமசாமி...!
திமுக தலைவருக்கு டிராபிக் ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ரொம்ப ரொம்ப எளிய மனிதர். ஆனால் கோபம் வந்தால் மனிதர் பின்னி எடுத்து விடுவார்.. அது ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும் சரி.. பயப்படறதே இல்லை. அப்படி ஒரு கோபம்.. ஆனால் இந்த மனிதரால் எத்தனை எத்தனை நன்மைகள் மக்களுக்குத் தெரியுமா. .அவர்தான் டிராபிக் ராமசாமி.
டிராபிக் ராமசாமியை அவரது வீட்டில் பார்ப்பதை விட கோர்ட்டுகளில்தான் அதிகம் பார்க்கலாம். எப்போதும் கையில் கேஸ் கட்டுடன் நடமாடும் அவர் போன்ற ஒரு சமூக சேவகரைப் பார்ப்பது எல்லாம் இனிமேல் அரிதிலும் அரிதாகவே இருக்கும்.
டிராபிக் ராமசாமி திடீரென இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வருகை தந்தார். கையில் ஒரு பொக்கேவுடன், பொக்கை வாய்ச் சிரிப்புடன் வந்த அவரைப் பார்த்து திமுகவினருக்கு ஆச்சரியம். என்ன சார் இந்தப் பக்கம் என்று அவரிடம் கேட்டபோது திமுக தலைவரை வாழ்த்த வந்தேன் என்று கூறினார்.

கையில் பொக்கே
ஸ்டாலினுக்குத் தகவல் போக அவர் வெளியே வந்தபோது டிராபிக் ராமசாமியைச் சந்தித்தார். திமுக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்த வந்தேன் என்று ஸ்டாலினிடம் கூறிய ராமசாமி, கையில் பொக்கேவையும் கொடுத்து வாயார வாழ்த்தினார். ஸ்டாலினுக்கு ரொம்ப சந்தோஷம்.

வாழ்த்துக்கள்
மக்கள் அளித்த தீர்ப்பால் மகிழ்ந்துள்ள நிலையில் மக்களிடம் நல்ல பெயர் பெற்றவரான டிராபிக் ராமசாமியின் வாழ்த்தும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் போல, ஸ்டாலினும் ராமசாமியிடம் சந்தோஷமாக பேசி அவரது வாழ்த்துகளை வாங்கி வழியனுப்பி வைத்தார்.

தாத்தா ஸ்டிரிக்ட்
டிராபிக் ராமசாமி, ஸ்டாலினை வாழ்த்தி விட்டாரே என்று ஜாலியாக இருந்து விட முடியாது. நாளை திமுக ஆட்சி அமைந்து, அந்த ஆட்சியில் ஏதாவது போக்குவரத்து விதி மீறல் பஞ்சாயத்து வந்தால் முதல் ஆளாக டிராபிக் ராமசாமிதான் அதைக் கண்டிப்பார் என்பது கவனத்தில் இருக்கட்டும். ஏனென்றால் தாத்தா ரொம்ப ஸ்டிரிக்ட் இந்த விஷயத்தில்.

பலர் வாழ்த்து
இன்று டிராபிக் ராமசாமி மட்டுமில்லை. திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் பலரும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றனர். அவர்களில் முக்கியமானவர் தமிழச்சி தங்கப் பாண்டியன். ஸ்டாலினிடம் ஆசி பெற்ற கையோடு, கருணாநிதியின் சமாதிக்கும் சென்று சான்றிதழை வைத்து வணங்கி விட்டு வந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications