பிரதமர் மோடி வருகை.. சென்னை - திருச்சி ஹைவேயில் வாகனங்களுக்கு இன்று கட்டுப்பாடு! பயணிகள் கவனம்
சென்னை: பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜிஎஸ்சி சாலையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அவசர கால ஊர்திகள் வழக்கம் போல அதே பாதையில் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகிறார்
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பிறகு டிடிவி தினகரன், பாமக, ஓபிஎஸ் உள்ளிட்ட மாற்று கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் பாமகவில் அன்புமணி, அமமுகவின் டிடிவி தினகரன் உள்ளிட்டோ தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளனர். பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் தலைவர்களை ஒரே மேடையில் ஏற வைக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பிரமாண்ட கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதனால் மதுராந்தகத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்
அதேபோல் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை - திண்டிவனம் ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் உள்ள மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதனால், கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஜி.எஸ்.டி சாலையில் சென்னை-திருச்சி மார்க்கமாகவும் மற்றும் திருச்சி-சென்னை மார்க்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை டூ திண்டிவனம்
சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்
காலை 07 மணி முதல் மாலை 07 மணி வரை சென்னை - திண்டிவனம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் வந்து ஜி.எஸ்.டி சாலையை அடையலாம்.
(அல்லது) சென்னை-திண்டிவனம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடு பேட்டை-தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக ஜி.எஸ்.டி சாலையை அடையலாம். (அல்லது) ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம் சென்று ஜி.எஸ்.டி சாலையை அடையலாம்.
திருச்சி டூ சென்னை
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்
காலை 07 மணி முதல் மாலை 07 மணி வரை திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு வழியாக திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு), கீழம்பி புறவழிச்சாலை வழியாக செல்லலாம்.
சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் பிரிதிவி மங்களம் வழியாக தியாகதுர்கம், மணலூர்பேட்டை, திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு), கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.
கூட்டேரிப்பட்டிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு), கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.திண்டிவனத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக சென்னை செல்லலாம்.
அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள்
சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை சென்னையிலிருந்து திண்டிவனம் மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் சென்று ஜி.எஸ்.டி சாலையை அடையலாம்.
(அல்லது) வண்டலூர், படப்பை-ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம்-வந்தவாசி-தெள்ளார்-வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் வழியாக கூட்டேரிப்பட்டு சென்று ஜி.எஸ்.டி சாலையை அடையலாம். (அல்லது) கூடுவாஞ்சேரி-மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு, திருக்கழுக்குன்றம், வெங்கம்பாக்கம் சந்திப்பு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம், திண்டிவனம் வழியாகவும் ஜி.எஸ்.டி. சாலையை அடையலாம்.
சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து ஒரகடம், வாலாஜாபாத்-காஞ்சிபுரம், வந்தவாசி-தெள்ளார், வெள்ளிமேடு பேட்டை-தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாகவும் ஜி.எஸ்.டி சாலையை அடையலாம்.
விழுப்புரம் டூ சென்னை
விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள்
காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை விழுப்புரத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம்-பாண்டிச்சேரி சந்திப்பு சாலை வழியாக மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம்.
(அல்லது) திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை, தெள்ளார்-வந்தவாசி-காஞ்சிபுரம், வாலாஜாபாத்-வண்டலூர் வழியாக சென்னைக்கு செல்லலாம். (அல்லது) திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை, தெள்ளார்-வந்தவாசி-காஞ்சிபுரம் (செவிலிமேடு பாலாறு சந்திப்பு), கீழம்பி புறவழிச்சாலை ஜி.டி. சாலையை அடைந்து ஸ்ரீபெரும்பத்தூர் வழியாக சென்னைக்கு செல்லலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்ட அறிவிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அவசர கால ஊர்திகள் வழக்கம் போலவே அதே பாதையில் செல்லலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications