சென்னையில் ஏழு நாளைக்கு இந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்து மாற்றம்.. போலீசார் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை கதீட்ரல் சாலை அமராவதி ஹோட்டல் முன்பு கழிவுநீர் பாதாளசாக்கடை அமைப்பு சேதமடைந்துள்ளது. இதனை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சரி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக கதீட்ரல் சாலை பகுதியில் இன்று முதல் 7 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை கதீட்ரல் சாலையில் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது " சென்னை ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து டிடிகே சாலை வழியாக மியூஸிக் அகாடமி சந்திப்பு வந்து கதீட்ரல் சாலையில் இடதுபுறம் திரும்பும் அனைத்து வாகனங்களும், ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து நேராக செல்லாமல் மாறாக ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி முரேஸ் கேட் ரோடு வழியாக சென்று வலதுபுறம் திரும்பி கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக சென்று கதீட்ரல் சாலை அடைந்து இலக்கை நோக்கி செல்லலாம்.

பிஷப் வாலஸ் கிழக்கு சாலை வழியாக கதீட்ரல் சாலை செல்லும் வாகனங்கள் மியூஸிக் அகாடமி சந்திப்பில் யூ-வளைவு எடுத்து சவேரா ஹோட்டல் முன்பாக உள்ள சர்வீஸ் சாலையில் சென்று நீல்கிரீஸ்சந்திப்பை அடைந்து, அங்கு யூ-வளைவு எடுத்து மியூஸிக் அகாடமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று இலக்கை அடைய லாம்.
வி.பி.ராமன் சாலை, லாயிட்ஸ் சாலை, இந்தியன் வங்கி சந்திப்பில் இருந்து, டிடிகே சாலை வழியாக மியூஸிக் அகாடமி சந்திப்பு வலதுபுறம் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக கதீட்ரல் சாலை செல்லும் வாகனங்கள், இடதுபுறம் திரும்பி சவேரா ஹோட்டல் முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பை அடைந்து யூ-வளைவு எடுத்து மியூஸிக் அகாடமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
ஜே.ஜே.சாலை, ஸ்ரீமன் சீனிவாசன் சாலை, அம்புஜம்மாள் தெரு, பாஷ்யம் பஷிர் அகமது தெரு மற்றும் பார்த்தசாரதி கார்டன் தெரு வழியாக வரும் வாகனங்கள் டிடிகே சாலை வந்து மியூஸிக் அகாடமி சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பாமல் வலது புறம் திரும்பி சவேரா ஹோட்டல் முன்பு உள்ள சர்வீஸ் ரோடில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பை அடைந்து யூ-வளைவு எடுத்து மியூஸிக் அகாடமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று அவர்களின் இலக்கை அடையலாம்" இவ்வாறு சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications