சென்னையில் கோதுமை கலர்ல நாகம்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத +2 மாணவி! கடைசியில் நடந்த சோகம்
சென்னை: சென்னையில் நாகப்பாம்பு கடித்து பிளஸ் 2 மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவியின் வீட்டில் சோதனை நடத்திய தீயணைப்பு துறையினர் 6 நீளம் கொண்ட நாகப்பாம்பை மீட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பகுதியில் மாணவி யாசினி தனது பெற்றோருடன் வசித்து வந்திருந்தார். நேற்றிரவு தன்னை ஏதோ கடித்துவிட்டது என்று யாசினி பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

பாம்புக்கடி
உடனே பைக்கில் வைத்து மாணவியை பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி யாசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் வட சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவியின் உடலில் மூன்று இடங்களில் பாம்பு கடி தழும்புகள் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எர்ணாவூர் பகுதியில் பாம்புகள் தொல்லை அதிகமாக இருப்பாக வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்ததாகவும்.. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.3
பாம்புகள் நடமாட்டம் இருக்கிறது என்று சொன்னாலும், நீங்களே பிடித்து வையுங்கள்.. பின்னர் வந்து மீட்டுக்கொள்கிறோம் என தீயணைப்பு துறையினர் அலட்சியமாக பதில் சொல்வதாக மாணவியின் உறவினர் கூறியுள்ளனர்.
நாகப்பாம்பு ஏன் அபத்தானது?
இந்தியாவில் மொத்தம் 4 வகை பாம்புகள்தான் பெரிய ஆபத்து கொண்டவை. அதில் முக்கியமானது இந்த நாகப்பாம்புதான். இதை நல்ல பாம்பு என்றும் அழைப்பார்கள். பார்க்க கோதுமை நிறத்தில் இருப்பதால்.. கோதுமை நாகம் என்றும் இதற்கு பெயர் உண்டு. இந்த வகை பாம்புகள் அதிகபட்சமாக 4-5 அடி வரை வளரும். ரொம்ப ரேராக 7 அடி கூட வளர்வதுண்டு. இந்த வகை பாம்பின் விஷம் நியூரோடாக்சின் என்று சொல்வார்கள். இந்த வகையான விஷம் ரொம்பவும் மோசமானது.
பாம்பு கடித்தால் என்ன ஆகும்?
காரணம்.. இது நேரடியாக மனிதர்களின் நரம்பு மண்டலத்தை தாக்கும். மூளையிலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு செல்லும் சிக்னலை விஷம் கட் செய்துவிடும். இதனால் கண் இமைகள் கண்ட்ரோலில் இருக்காது, தானக மூடிவிடும். பார்வைத்திறன் குறையும், நாக்கு தடிமனாகி பேசும் திறன் பாதிக்கப்படும். எச்சில் கூட விழுங்க முடியாது. கை, கால்கள், கழுத்து நிற்காது. மொத்த உடலும் தளர்ந்து போகும்.
சிகிச்சை முக்கியம்
பாம்பு கடித்து 30 நிமிடங்களுக்குள் நச்சு முறிவு மருந்தை எடுத்துக்கொள்ளவில்லை எனில், உடல் முழுவதும் நச்சு பரவி.. சுவாச மண்டலத்தையும் பாதிக்கும். இதனால் நுரையீரல் முற்றிலுமாக செயலிழந்துபோகும். கடைசியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணிக்க வேண்டி வரும்.
இந்த விஷத்துக்கு எதிர்ப்பு மருந்து நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது. எனவே, பாம்பு கடித்த உடன்.. பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு கடிபட்டவர்களை கொண்டு போக வேண்டும்.


Click it and Unblock the Notifications
