சென்னை மெரினா சாலையில் நள்ளிரவில் பரிதாபம்.. அலறித் துடித்த பசு மாடு.. வயிற்றில் இருந்த கன்றும் பலி!
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று நள்ளிரவில் சாலையைக் கடந்த பசு மாட்டின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாடு மற்றும் மாட்டின் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியும் உயிரிழந்துள்ளன.
மாடு மீது மோதி விபத்துக்குள்ளான கார், மருத்துவத்துறைக்கு சொந்தமான வாகனம் எனவும், மாடு திடீரென சாலையின் குறுக்கே வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பல அசம்பாவித சம்பவங்ங்கள் நடைபெற்று வருகின்றன. சாலைகளில் மாடுகள் சண்டை போடும்போது வாகனங்கள் வந்தால் குறுக்கே சென்று விபத்துகளுக்கு காரணமாகின்றன. மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன.
மேலும், மாடுகள், நடந்து செல்வோரை முட்டி வீசும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிச் சிறுமி ஒருவரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாக தாக்கின. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அண்மையில் மாடுகள் சாலையில் சுற்றுத் திரிவதை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கால்நடை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் பசு மாட்டின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் திடீரென பசு மாடு குறுக்கே வந்த நிலையில், அதன் மீது கார் மோதியதில் பசு மற்றும் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியும் உயிரிழந்துள்ளன.
பசு மாடு உயிருக்கு போராடியபோது, அங்கிருந்தவர்கள் கால்நடை மருத்துவமனை உதவி எண்களை கூகுளில் தேடி தொடர்பு கொண்ட போது, பல எண்கள் உபயோகத்தில் இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications