Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ ப்ளூ வேல்.. இப்போ கொரியன் லவ்வர்.. உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் கேம்கள் மற்றும் சவால்கள் குறித்து சமீபகாலமாகப் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவில் தொடங்கி 2016-17 காலக்கட்டத்தில் உலகையே உலுக்கிய 'புளூ வேல்' (Blue Whale) சவாலைத் தொடர்ந்து தற்போது 'கொரியன் லவர்' (Korean Lover) என்ற புதிய விபரீத விளையாட்டு குறித்த விவாதம் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பாரத் சிட்டி சொசைட்டியில் வசித்து வந்த மூன்று சகோதரிகள் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

korean love game

விளையாட்டு டாஸ்க் ப்ரஷர்

இந்த விபரீத முடிவுக்கு 'கொரியன் லவர்' என்ற ஆன்லைன் கேம் தான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து உயிரிழந்த சிறுமிகளின் தந்தை கூறுகையில் தனது மகள்கள் இத்தகைய ஆபத்தான விளையாட்டை விளையாடுவது பற்றி தமக்கு எந்தத் தகவலும் தெரியாது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதில் மொத்தம் 50 சவால்கள் அல்லது டாஸ்க்குகள் இருந்ததாகவும் தனது 14 வயது மகள் அந்த விளையாட்டில் தலைவராக செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டாஸ்க்குகளை முடிக்க வேண்டும் என்ற தீவிரத்தில் இந்த சிறுமிகள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விளையாடி வந்துள்ளனர்.

புளூ வேல் நியாபகம் இருக்குல்ல

கடந்த 2017-ஆம் ஆண்டு புளூ வேல் விளையாட்டின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக இருந்தது. மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் அப்போது பதிவாகின. புளூ வேல் என்பது ஒரு பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலி அல்ல மாறாக இது ஒரு ஆன்லைன் சவால் முறையாகும். 50 நாட்கள் நீடிக்கும் இந்த சவாலில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் தூக்கத்தைத் தவிர்த்தல் மற்றும் இறுதியில் தற்கொலை செய்துகொள்ளுதல் போன்ற கொடூரமான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

கார்ல இருந்து இறங்கி கிறுக்குத்தனம்

இதேபோல் 2018-ஆம் ஆண்டு 'கிகி சேலஞ்ச்' (Kiki Challenge) என்ற பெயரில் மற்றொரு விபரீத மோகம் பரவியது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் இந்தச் செயலால் பல இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து 'மோமோ சேலஞ்ச்' (Momo Challenge) என்ற பெயரிலும் சமூக வலைதளங்களில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இத்தகைய விளையாட்டுகள் பெரும்பாலும் சமூக வலைதளக் குழுக்கள் அல்லது ரகசிய குறுஞ்செய்திகள் மூலமாகவே பரவுகின்றன. இதனால் இவற்றை பிளே ஸ்டோர் போன்ற தளங்களில் இருந்து நீக்குவது கடினமாக உள்ளது. ஆன்லைன் சவால்கள் மூலம் சிறார்கள் மனரீதியாக கையாளப்படுவதால் அவர்கள் அந்த இலக்கை முடிப்பதையே நோக்கமாகக் கொண்டு இத்தகைய விபரீத முடிவுகளை எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் குழந்தைகளின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான

கூகுள் ஃபேமிலி லிங்க் (Google Family Link)

இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு இலவச செயலி. இதன் மூலம்:

  • உங்கள் மகன் எந்தெந்த செயலிகளை (Apps) எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்கலாம்.
  • ஆபத்தான அல்லது தேவையற்ற செயலிகளை அவர் பதிவிறக்கம் செய்யாமல் தடுக்கலாம்.
  • தினசரி ஸ்கிரீன் நேரத்தைக் (Screen Time) கட்டுப்படுத்தலாம் மற்றும் இரவு நேரத்தில் போனை தானாகவே லாக் செய்யும்படி அமைக்கலாம்.

யூடியூப் கிட்ஸ் (YouTube Kids)

சாதாரண யூடியூப்பில் தேவையற்ற வீடியோக்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட யூடியூப் கிட்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம். இதில் வயதுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை மட்டுமே பார்க்க முடியும்.

சமூக வலைதளப் பாதுகாப்பு

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற செயலிகளில் 'Privacy Settings' சென்று கணக்கை 'Private' ஆக மாற்றவும். இதன் மூலம் முன்பின் தெரியாதவர்கள் அவருக்கு மெசேஜ் அனுப்புவதைத் தடுக்க முடியும். மேலும், 'Sensitive Content Control' மூலம் தேவையற்ற வீடியோக்கள் வராமல் கட்டுப்படுத்தலாம்.
தேடுபொறி கட்டுப்பாடு (Safe Search)

கூகுள் தேடலில் (Google Search) 'SafeSearch' அமைப்பை ஆன் செய்வதன் மூலம், வன்முறை அல்லது ஆபாசமான தேடல் முடிவுகள் வராமல் தவிர்க்கலாம்.

பெற்றோருக்கான சில ஆலோசனைகள்

  • திறந்த உரையாடல்: தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை விடவும், உங்கள் மகனிடம் ஆன்லைன் ஆபத்துகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது சிறந்தது. ஏதேனும் தவறு நடந்தால் பயப்படாமல் உங்களிடம் சொல்லும் சூழலை உருவாக்குங்கள்.
  • உடன் விளையாடுங்கள்: அவர் விளையாடும் கேம்கள் என்ன, அதில் யாருடன் பேசுகிறார் என்பதை அவ்வப்போது கவனியுங்கள்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+