நூடுல்ஸ் சாப்பிடும் போது "இந்த" தப்பை மட்டும் செய்யாதீங்க.. 13 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்! ஷாக்
சென்னை: 13 வயதான சிறுவன் ஒருவன் சமைக்காத நூடுல்ஸ்களை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளான். நம்மைச் சுற்றிலும் கூட பலரும் சமைக்காத நூடுல்ஸ்களை சாப்பிட்டு நாம் பார்த்திருப்போம். அதுபோல சாப்பிடுவது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதையே இது உணர்த்துவதாக இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நூடுல்ஸ் இங்கு அனைவருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. சீக்கிரம் சமைக்கலாம், சூப்பர் டேஸ்ட் எனப் பல காரணங்களால் நூடுல்ஸ் பலருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. ஆனால், உண்மையில் நூடுல்ஸ் சாப்பிடுவதால் பல வகையான பாதிப்பும் கூட ஏற்படுகிறது. இதுபோல ஒரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

சிறுவன் உயிரிழப்பு
எகிப்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் சமைக்காத இன்ஸ்டன்ட் நூடுல்ஸை சாப்பிட்டுள்ளான். அதுவும் மூன்று பாக்கெட் நூடுல்ஸை இதுபோல சமைக்காமல் சாப்பிட்டுள்ளான். இதனால் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அந்தச் சிறுவன் உயிரிழந்தான். சமைக்காத நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்தச் சிறுவனுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும், வியர்வை மற்றும் வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதலில் நூடுல்ஸில் பாய்சன் மிக்ஸாகி இருக்கலாம் அல்லது அதில் பிரச்சினை இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் நூடுல்ஸ் விற்ற கடைக்காரரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முறையாகப் பாதுகாப்பு தரநிலைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தெல்லாம் அதிகாரிகள் விசாரித்தனர். மேலும், நூடுல்ஸ் மாதிரிகள் சோதனைக்கும் அனுப்பப்பட்டன. சோதனையில் நூடுல்ஸில் எந்தவிதக் கலப்படமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
சமைக்காத நூடுல்ஸ்
அதிக அளவு சமைக்காத நூடுல்ஸ் சாப்பிட்டதே உயிரிழப்புக்குக் காரணம் என்பது தெரிய வந்தது. சமைக்காத நூடுல்ஸ் குடல் போய் அடைத்துக் கொண்டது. இதுவே அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது. நமது நாட்டிலேயே கூட சிலர் இதுபோல சமைக்காமல் நூடுல்ஸ் சாப்பிடுவார்கள். ஆனால், அவை எந்தளவுக்கு ஆபத்து என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
சமைக்காத நூடுல்ஸ் கடுமையான நீரிழப்பு மற்றும் குடல் அடைப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கூட சிலர் இந்த ஆபத்துகளை உணராமல் சமைக்காத நூடல்ஸ்களை சாப்பிடுகிறார்கள். அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள். இதனால் மேலும் மேலும் பலரும் இந்த ஆபத்தை முயன்று பார்க்கிறார்கள்.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஈஸியாக சமைக்கலாம்.. பசிக்கும் நேரத்தில் நொடிகளில் ரெடி செய்துவிடலாம் என்பது உண்மை தான். ஆனால், அவை பொதுவாகவே உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதுவும் அவற்றை சமைக்காமல் சாப்பிட்டால் கடுமையான மற்றும் தீவிரப் பக்கவிளைவுகளை ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
என்ன பாதிப்பு?
அதில் முதல் சிக்கல் குடல் அடைப்பு.. பச்சையான நூடுல்ஸ் செரிமான மண்டலத்தை அடைத்துக் கொண்டு குடல் அடைப்பை ஏற்படுத்தலாம். இதனால் கடுமையான வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிறு வீக்கம் போன்றவை ஏற்படும். இதுபோல ஏற்பட்டால் மருத்துவச் சிகிச்சை உடனடியாகத் தேவைப்படும். குடலில் சிக்கியிருக்கும் நூடுல்ஸை அகற்றுவதற்கு எண்டோஸ்கோபி அல்லது அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.
அடுத்து கல்லீரல் பாதிப்பு.. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்பு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நூடுல்ஸ்களில் அதிக சோடியம் மற்றும் கொழுப்பு இருக்கும் இதனால் கல்லீரல் சீக்கிரம் பாதிக்கப்படும்.. மேலும், நூடுல்ஸில் இருக்கும் சில வகை கேமிக்கல்கள் ஃபேட்டி லிவர் பாதிப்பைக் கூட ஏற்படுத்தலாம்.
கவனம் தேவை
இது மட்டுமில்லாமல் சிலருக்குத் தலைவலி மற்றும் குமட்டல் கூட ஏற்படும்.. அதிகப்படியாக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களை சாப்பிட்டால் சிலருக்குக் கடுமையான தலைவலி மற்றும் குமட்டல் ஏற்படும். இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் உள்ள அதிக சோடியம், கொழுப்பு மற்றும் சர்க்கரை இதற்குக் காரணமாகும்.
அடுத்து முக்கியமானது ஊட்டச்சத்துக் குறைபாடு.. இந்தக் காலத்தில் குழந்தைகள் சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படும். மேலும், உடல் பருமன், இருதய நோய்கள் ஏற்படும் ஆபத்தும் அதிகமாகவே இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications