ஒழுக்கம் தவறினால் இதுதான்.. குன்றத்தூர் அபிராமியின் நடத்தையால் நின்ற கல்யாணம்! தற்கொலை செய்த சகோதரர்
காஞ்சிபுரம்: ஒழுக்கம் தவறியதால் தனது பிள்ளைகளை கொலை செய்தது மட்டும் இன்றி தனது தம்பி மரணத்திற்கும் குன்றத்தூர் அபிராமி காரணமாக அமைந்து இருக்கிறார். அபிராமியின் நடத்தையால் தம்பியின் கல்யாணம் நின்று போனதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தகாத உறவு கண்ணை மறைத்ததால் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் பாலில் தூக்க மாத்திரை கொடுத்து இரண்டு மகன்களையும் கொலை செய்த கொடூர தாய் அபிராமி வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அபிராமி மற்றும் கள்ளக்காதலனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தம்பியின் மரணத்திற்கும் காரணமான அபிராமி
அபிராமியின் தகாத ஆசையால் அவரது குடும்பமே பாழ்பட்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அபிராமியின் தனது பிள்ளைகளை மட்டும் கொலை செய்யவில்லை.. தனது செயலால் தம்பியின் மரணத்திற்கும் மறைமுக காரணமாகவும் அமைந்தார்.
அபிராமியின் நடத்தையால் தம்பிக்கு நடைபெற இருந்த திருமணம் நின்றது. இதனால் மன உளைச்சல் அடைந்த சகோதர் தற்கொலை செய்து கொண்டார். 2021ல் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
அக்காவால் நின்று போன காதல் கல்யாணம்
அபிராமியின் தம்பி பிரசன்னா மணிகண்டன் (வயது 28). தனியார் வங்கியில் பணியாற்றி வந்த பிரசன்னா மணிகண்டன் தனது பெற்றோருடன் மாங்காடு அடுத்த பெரிய பணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பெரம்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பிரசன்னா மணிகண்டனும் காதலித்து வந்தனர்.
இதையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்த போது, பெண் வீட்டினருக்கு அபிராமி குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. இதனால், திருமண ஏற்பாடுகளை பெண் வீட்டினர் நிறுத்தினர். காதலை கைவிடுவதாக அந்த இளம்பெண்ணும் கூறினார். இதனால், வேதனை அடைந்த பிரச்ன்னா மணிகண்டன், வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஒழுக்கம் தவறினால் குடும்பமே நிலைகுலையும் என்பதற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த சோக நிகழ்வு நடைபெற்றது
அபிராமிக்கு வாழ்நாள் சிறை
குன்றத்தூரை அடுத்த மூன்றாம்கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களது மகன் அஜய் (7), மகள் கார்னிகா (4). டிக்டாக், ரீல்ஸ் மூலம் அபிராமி சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருந்தார். அவருக்கும் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலைபார்த்த ஊழியரான மீனாட்சி சுந்தரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது.
பிரியாணி ஆர்டர் செய்யும் போது அதனை கொடுக்க அடிக்கடி வந்த மீனாட்சி சுந்தரத்துடன் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகள் கார்னிகாவை பாலில் தூக்கமாத்திரை அதிக அளவு கலந்து அபிராமி கொன்றார்.
துடிக்க துடிக்க கொலை
இதில் தப்பிய மகன் அஜய்யின் மூக்கையும், வாயையும் பொத்தி துடிக்க துடிக்க கொலை செய்தார். மேலும் கணவர் விஜய்யை கொலை செய்ய திட்டமிட்டபோது அன்று இரவு வீட்டுக்கு வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமி, கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் முதலில் நடைபெற்றது. பின்னர் காஞ்சீபுரம் கோர்ட்டில் மகிளா நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகு காஞ்சீபுரத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
குற்றவாளி என தீர்ப்பு
8 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணைகள் கடந்த 15 ஆம் தேதி முடிந்தது. அப்போது நீதிமன்றத்தில் அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கின் தீர்ப்பு 24 ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி செம்மல் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்காதலுக்காக மகன், மகளை கொடூரமாக கொன்ற அபிராமி, அவரது கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி செம்மல், குற்றம்சாட்டப்பட்ட அபிராமி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
சாகும் வரை ஆயுள் தண்டனை
அபிராமி கண்ணீருடன் தனது வயதான பெற்றோர் மற்றும் தம்பியுடன் வாழ விரும்புவதாகவும் குறைந்த பட்ச தண்டனை அளிக்கும் படியும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து நீதிபதி செம்மல் கூறும்போது, இருவரும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் என்று தெரிவித்து தண்டனை விபரங்களை அறிவித்தார். அதில் தகாத உறவுக்காக பெற்ற குழந்தையை கொன்ற அபிராமி மற்றும் காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications