தூள் கிளப்புதே.. சீறி வந்த "வந்தே மெட்ரோ ரயில்.." உள்ளே எப்படி இருக்கு பாருங்க.. போட்டோக்கள்! ஆஹா
சென்னை: வந்தே பாரத் ரயில்களை போலவே வந்தே மெட்ரோ ரயிலிலும் எக்கச்சக்க வசதிகள் இருக்கும் என்று பயணிகள் எதிர்பார்த்தது போலவே முழுவதும் ஏசி வசதி, தானியங்கி கதவுகள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, எந்த இடத்தில் ரயில் செல்கிறது என்பதை காட்டும் வசதி போன்ற வசதிகள் உள்ளன. தற்போது சென்னை பீச் டூ காட்பாடி இடையே சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுக செய்யப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 60 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

வந்தே மெட்ரோ ரயில்: இந்த நிலையில் தான் வந்தே பாரத் ரயில்களை போல வந்தே மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டது. அதாவது குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டது. அதாவது வந்தே மெட்ரோ ரயில் அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் தொலைவுக்குள் மட்டுமே இயங்கும். தற்போது வந்தே மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அகலமான ஜன்னல் கண்ணாடிகள்: கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகள் வந்தே மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முழுவதும் ஏசி வசதி, தானியங்கி கதவுகள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, எந்த இடத்தில் ரயில் செல்கிறது என்பதை காட்டும் வசதி.. அகலமான ஜன்னல் கண்ணாடிகள் என வந்தே மெட்ரோ ரயில்களில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கும் என ரயில்வே தரப்பில் சொல்லப்பட்டது.
சோதனை ஓட்டம் நிறைவு: இதனால் இந்த ரயில் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான், வந்தே மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடந்தது. சென்னை கடற்கரை - காட்பாடி ரூட்டில் இந்த வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் நடைபெற்றது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
புகைப்படங்கள் வெளியாகின: சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. முதலில் வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து வந்தே மெட்ரோ ரயில் கடற்கரை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து ரயில் இயக்கப்பட்டது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சென்னை கடற்கரை - காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதையடுத்து மீண்டும் காட்பாடியில் இருந்து சென்னை பீச்சுக்கு சோதனை ஓட்டம் நடந்தது.
என்னென்ன வசதிகள்?: சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த வந்தே மெட்ரோ ரயிலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வந்தே பாரத் ரயில் போலவே ஹைடெக் வசதியுடனும் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதியுடன் கொண்டதாக இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
100 கி.மீ வேகம்: இந்த ரயிலில் முழுவதும் ஏசி வசதியும், ஒவ்வொரு பெட்டிக்கும் நவீன கழிவறை வசதியும் உள்ளது. இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் 200 பேர் நின்று செல்லும் வகையிலும் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடியது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இது பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications