பிரேக்குனு நெனச்சி ஆக்ஸிலேட்டரை மிதிச்சுட்டேன்.. சென்னை மின்சார ரயில் விபத்தில் ஓட்டுநர் வாக்குமூலம்
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீதான தவறே காரணம் என ரயில்வே காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்வதற்காக மின்சார ரயில் ஒன்று பேசின் பிரிட்ஜ் பணிமனையிலிருந்து கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு நேற்று முன் தினம் மாலை 4.52 மணிக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயில் நிறுத்துமிடத்தின் அருகே ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தார். ஆனால் ரயில் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரயிலில் இருந்து குதித்து ஓட்டுநர் பவித்ரன் உயிர் தப்பினர்.

ரயில் நடைமேடை
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ரயில் நடைமேடை மீது ஏறி நின்றது. அப்போது ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. இதனால் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. ஆனால் ரயிலின் என்ஜின் உள்இரண்டு பெட்டிகளும் ரயில் மோதிய இடத்தில் இருந்த கடைகளும் சேதமடைந்தன.

ரயில் மோதிய வேகம்
ரயில் மோதிய வேகத்தில் புழுதி பறந்தது. மற்றபடி யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து அங்கிருந்த சில ரயில் பயணிகள் கூறுகையில், பணிமனையிலிருந்து ரயில் மெதுவாகத்தான் வந்தது. திடீரென நடைமேடையில் இருந்தவர்களை பார்த்து ஓட்டுநர் விலகிச் செல்லுமாறு கையசைத்தார்.
Recommended Video

ரயில் நடைமேடை
அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதையடுத்து ரயில் நடைமேடையில் ஏறிய போது தூரத்தில் இருந்த மக்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரயில் பிரேக் பிடிக்காமல் போனது எப்படி என்பது குறித்து ரயில்வே காவல் துறை விசாரணை நடத்தி வந்தது.

பிரேக்கிற்கு பதில் ஆக்ஸிலேட்டர்
இந்த நிலையில் ஓட்டுநர் பவித்ரனிடம் முதல் கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் ரயிலை நிறுத்துவதற்கு பிரேக் பிடிப்பதற்கு பதிலாக தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதித்து விட்டேன் என ஓட்டுநர் தெரிவித்துள்ளார். எனவே இந்த விபத்திற்கு ஓட்டுநரே காரணம் என ரயில்வே போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications