Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையிலிருந்து மும்பை செல்ல ஏசி கோச்சில் கட்டணம் எவ்வளவு? எந்த நகரத்துக்கு டிக்கெட் அதிகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் இன்று முதல் ரயில் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் சென்னையிலிருந்து முக்கியமான 8 நகரங்களுக்குச் செல்ல என்ன கட்டணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் புதிய கட்டண முறை அமலுக்கு வருகிறது என்ற அறிவிப்பு வெளியான நிலையில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட்டது. 215 கி.மீ. வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கட்டண உயர்வு இல்லை. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பயணித்தால் கி.மீ. க்கு 1 பைசா உயர்ந்துள்ளது.

indian railway train fare

215 கிலோமீட்டருக்கு மேல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணித்தால் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்ந்துவிட்டது. Non Ac-ல் 500 கிமீ பயணிக்க ரூ 10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஏசி வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் ரயில்வே துறைக்கு ரூ 600 கோடி வருமானம் கிடைக்கும்

இந்த கட்டண உயர்வால் புறநகர் ரயில்கள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு இல்லை என்ற தகவலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

இந்த நிலையில் இன்று முதல் இந்த கட்டணம் அமலுக்கு வந்த நிலையில் சென்னையிலிருந்து வட மாநிலத்து நகரங்களான மும்பை, டெல்லிக்கு செல்ல எவ்வளவு கட்டணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதாவது சென்னையிலிருந்து டெல்லிக்கு செல்ல சாதாரண படுக்கை வசதியில் பழைய கட்டணமாக ரூ 845 வசூலிக்கப்பட்டு வந்தது. அது போல் ஏசி கோச்சில் பழைய கட்டணம் ரூ 2,185 ஆக வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது புதிய கட்டணமாக சாதாரண படுக்கை வசதி கொண்ட கோச்சில் சென்னையிலிருந்து டெல்லி செல்ல ரூ 890, ஏசி கோச்சில் ரூ 2235 உயர்ந்துள்ளது.

அது போல் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல சாதாரண படுக்கை வசதியில் பழைய கட்டணமாக ரூ 605 வசூலிக்கப்பட்டு வந்தது. அது போல் ஏசி கோச்சில் பழைய கட்டணம் ரூ 1,585 ஆக வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது புதிய கட்டணமாக சாதாரண படுக்கை வசதி கொண்ட கோச்சில் சென்னையிலிருந்து மும்பை செல்ல ரூ 635, ஏசி கோச்சில் ரூ 1615 உயர்ந்துள்ளது.

அது போல் சென்னையில் இருந்து 6 தமிழக நகரங்களுக்குச் செல்வதற்கான கட்டணங்களை பார்க்கலாம். அதாவது சென்னையிலிருந்து சேலம் செல்ல சாதாரண படுக்கை வசதியில் ரூ 265 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ 275 புதிய கட்டணம் ஆகும். அதுபோல் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் சென்னை டூ சேலம் செல்ல ரூ 675 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கட்டணமாக ரூ 685 வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து கோவை செல்ல சாதாரண படுக்கை வசதியில் ரூ 330 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ 340 புதிய கட்டணம் ஆகும். அதுபோல் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் சென்னை டூ கோவை செல்ல ரூ 845 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கட்டணமாக ரூ 855 வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து திருச்சி செல்ல சாதாரண படுக்கை வசதியில் ரூ 255 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ 265 புதிய கட்டணம் ஆகும். அதுபோல் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் சென்னை டூ திருச்சி செல்ல ரூ 655 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கட்டணமாக ரூ 660 வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல சாதாரண படுக்கை வசதியில் ரூ 430 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ 445 புதிய கட்டணம் ஆகும். அதுபோல் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் சென்னை டூ நாகர்கோவில் செல்ல ரூ 1125 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கட்டணமாக ரூ 1140 வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து நெல்லை செல்ல சாதாரண படுக்கை வசதியில் ரூ 405 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ 415 புதிய கட்டணம் ஆகும். அதுபோல் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் சென்னை டூ நெல்லை செல்ல ரூ 1050 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கட்டணமாக ரூ 1065 வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து மதுரை செல்ல சாதாரண படுக்கை வசதியில் ரூ 330 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ 340 புதிய கட்டணம் ஆகும். அதுபோல் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் சென்னை டூ மதுரை செல்ல ரூ 845 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கட்டணமாக ரூ 855 வசூலிக்கப்படுகிறது. இதே கட்டணங்கள் அந்தந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம்தான் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டண உயர்வு என்பதை சாமானிய மக்களால் சமாளிக்க முடியாத நிலை இருப்பதால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+